Kalaiyarasi Muthuvel Poem: எது தெய்வம்...?

Su.tha Arivalagan
May 28, 2026,02:33 PM IST

- கவி. கலை


பிரிவினை வகுத்து 

பிறர் அன்பை மறுப்பதா தெய்வம்? 

பிரித்தாலும் பிரியாமல்  

பிறர் அன்பில் பிணைப்பது தெய்வம்  

 

உணர்வினைக் கொன்று 

உணர்வின்றி உறவாடுவதா தெய்வம்? 

உணர்வினை இழக்காமல்  

உணர்வாய் உயிர்ப்பது தெய்வம்! 


 


கண்களில் காணாது  

கருணையைக் கொல்வதா தெய்வம்? 

கருணையை இகழாமல் 

கருணையாய்க் கனிவது தெய்வம்! 

 

படைப்பினை உருவாக்கி  

பாலினம் பார்ப்பதா தெய்வம்? 

பாலினம் பகுக்காமல் 

பாசமாய்ப் பயணிப்பது தெய்வம்!


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)