அடுத்தவர்களுக்கு உதவுதல் (Giving/ Helping others as Worship)

May 28, 2026,12:40 PM IST
- மைத்ரேயி நிரஞ்சனா

நாம் நிறைந்திருக்கும் போது உதவுதல் என்பது தானாக நடக்கிறது.. ஒரு மழை மேகம் எப்படி தண்ணீரால் நிறைந்திருக்கும் போது மழை பொழிகிறதோ.. ஒரு மலர் மனத்தால் நிறைந்திருக்கும் போது, காற்று வரும் போது மணம் எவ்வாறு பரவுகிறதோ அதை போல் உதவுதல் இருக்கிறது.. 

நாம் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை எல்லாமே இங்கிருந்து எடுக்கப்பட்டது தான்.. அதனால் நாம் கொடுக்கிறோம் என்ற எண்ணம் ஈகோவில் இருந்து பிறக்கிறது.. நாம் உதவுகிறோம் உதவப் போகிறோம் என்று எண்ணம் நம்மை ஒரு மேலான நிலையில் வைக்கிறது என்று நினைத்தோம் ஆனால் அது ஈகோ மட்டுமே..

மழை மேகம் மழை பொழிந்த உடன்.. ஒரு பாரத்தை இறக்கி வைத்த உணர்வினால் பூமிக்கு நன்றி சொல்லும்.. நாம் நிறைந்திருக்கும் போது அதை ஷேர் செய்வதனால்.. அதைப்  பெற்றுக் கொள்பவருக்கு நன்றி உணர்வு மேலோங்கும்.. Then Giving becomes a Worship.. 





எல்லோருக்கும் பிரச்சினைகள் இருக்கிறது ஒரே விதமான பிரச்சனைகள் ஆனால் பிரச்சனைகளின் அளவு மற்றும் வீரியம்  வேறுபடுகிறது.. சில பிரச்சினைகளை நாம் தீர்த்து வைக்க உதவும் போது நமக்கு நாமே உதவி கொள்கிறோம்.. அதனால் நம்மிடம் உதவி பெறுபவர்கள் நமக்கு உதவுகிறார்கள் என்பதை  மனதில் கொண்டிருந்தால் உதவுதல் ஒரு வழிபாடாக இருக்கும்.. ஈகோவிற்கு வேலை இல்லை..

ஒரு சிறிய கதையை பார்ப்போமா..

காஷ்முஷ் எனது நண்பராக இருந்தார்.. நான் வேலை பார்த்த கல்லூரியில் அவரும்  விரிவுரையாளராக ( Lecturer) இருந்தார்..

காஷ்முஷ் ஒரு பவர்ஃபுல் போஸ்டில் இருந்ததுனால் அவர் பலருக்கு வேலை இடமாற்றம்.. இதற்கெல்லாம் உதவி செய்வதுண்டு... அவருடன் நான் நடந்து செல்லும் போது.. யாராவது கடந்து சென்றால் தான் அவருக்கு என்னென்ன உதவி செய்வேன் என்று பட்டியலிடுவார்.. அப்போது அவ்வளவு பவ்யமாக நடந்து கொண்டவர்கள்.. இப்போது கண்டு கொள்கிறார்களா என்று புலம்புவார்.. அவர்களுக்கு நன்றி உணர்வு இல்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.. 

நாமும் பல விதத்தில் இவ்வாறு தான் உதவி செய்வதை கையாளுகிறோம்.. நம் வலது கையால் உதவி செய்வது இடது கை அறிய கூடாது என்று சொல்வார்கள்.. நம்மிடம் நிறைந்து இருக்கிறது என்பதனால் நாம் உதவுகிறோம் என்றால் அது Sharing.. நாம் இவ்வாறு கொடுப்பதனால் நாம் அறிந்திருக்கிறோமோ இல்லையோ.. அது பல மடங்காக நமக்கு திருப்பி வருகிறது.. அந்த எதிர்பார்ப்பினால் நாம் உதவி செய்தால் அது பயனற்றது..

ஓம் சாந்தி 

நாம் தொடர்வோம்..
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்

news

சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

news

ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்

news

எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!

news

இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!

news

சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!

news

நீலத்திரைக்கடலோரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்