சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

May 22, 2026,05:18 PM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


நம்ம எல்லாருக்கும் Extraordinary ஆக இருக்கணும் அப்படின்னு தான் ரொம்ப ஆசை.. இல்லையா..? ரொம்ப ரொம்ப சாதாரணமாய் இருப்பது மட்டுமே எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஆவதற்கு ஆன ஒரே வழி..


இது என்ன என்று புரிகிறதா? ஈகோ - அதற்கு ஏதாவது ஒன்று ஆகவேண்டும். 


அந்த ஆசைதான் ஈகோ என்றால் மறுப்பதற்கு இல்லை.. எதன் மீது ஆசை என்பதை பற்றி இல்லை.. வாழ்க்கையில் பணம், பதவி, புகழ், நிலபுலம், பெண்கள் இவை எல்லாம் பயனில்லை என்று உணர்பவர்கள் அடுத்து ஆன்மீகத்தில்  நாட்டம் கொண்டு, ஒரு இலக்கு வைத்துக்கொள்வது .. அதே ஆசை அடிப்படையில் தான்.. இங்கே பொருள் மட்டுமே மாறுகிறது.. இந்த புரிதல் தான் நமக்கு தியானத்திற்கு உதவும்..


தந்த்ரா முறையில் 112 தியான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.. ஏன் இத்தனை என்றால் மனித மனங்கள் பலவிதம்..112 என்பது குறிப்பிடத்தக்கது ஏன் எனில் இவ்வளவு வழிமுறைகள் தான் சாத்தியம்.. We cannot add even one more method..


ஒரு சிறிய கதையை பார்ப்போமா 




காஷ்முஷ் இந்த 112 வழிமுறைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதை ஒரு நாளைக்கு 300 முறை செய்து வந்தார்..

மூன்று மாதங்கள் செய்து வந்த பிறகும் ஒன்றுமே நடக்கவில்லை என்று அவரது குருவை சந்திக்க சென்றார்..

குருவிடம் சொன்னார் ..பணம் சொத்து உறவுமுறைகள் இவை எல்லாமே பயனற்றது என்று உணர்ந்திருக்கிறேன்.... இருக்கிற காலம் கொஞ்சம்.. அதற்குள் முக்தி நிலையை அடைந்தே ஆக வேண்டும்..


நான் அவ்வளவு sincere ஆக முயற்சி செய்து ஒன்றும் நடக்கவில்லை.. எனக்கு பைத்தியம் பிடித்து விடும் போல இருக்கிறது.. He was on the verge of a nervous breakdown ..


அதைப் பார்த்த குருவுக்கு கவலையாகி விட்டது.. முதலில் நீ செய்து கொண்டிருப்பதை நிறுத்து.. உன்னுடைய இந்த சீரியஸ்னஸ் தான் பிரச்சனை என்பதை அறிகிறாயா..? நீ சொல்வதெல்லாம் சரிதான்..  பணம் பெரிது என்று அதைப் பிடித்துக் கொண்டிருந்தாய்.... இப்போது இந்த முறையை பிடித்துக் கொண்டுள்ளாய்.. இரண்டும் ஒன்றுதான்.. தியானம் விளையாட்டாக நடக்க வேண்டும்..  எந்த ஆசையும் தியானம் செய்ய தடை தான்.. உன்னுடைய இந்த முயற்சி.. இந்தப் பிடித்துக் கொள்ளும் மனநிலை.. இவை எல்லாமே தியானம் நடப்பதற்கு இடையூறு.. 


மனம் என்பது அசைந்து கொண்டே இருக்கும் தன்மை உடையது.. இந்த அசைதல் நம்முடைய ஞாபகங்களுக்கும் நம் எதிர்காலம் பற்றிய கனவுகளுக்கும் இடையே அசைந்து கொண்டிருக்கிறது..


ஏதோ ஒரு பொருளை உற்று நோக்குதல் (Gazing) ஒரு தியான வழிமுறையாக சொல்லப்பட்டிருக்கிறது.. அது பூவாக இருக்கலாம் இல்லை நெருப்பாக இருக்கலாம் அல்லது வானமாக இருக்கலாம்.. நாம் சிறிது நேரம் உற்று நோக்கும் போது.. நாம் பார்த்துக் கொண்டிருப்போம்.. ஆனால் நம் மனம் அசைய ஆரம்பித்து இருக்கும்.. அல்லது மனம் உறங்கி இருக்கும்.. நாம் அந்த அசைவுகளில் சென்று விடுவோம் அல்லது உறக்க நிலைக்கு சென்று விடுவோம்..

(Movement or Deep Sleep)..


இந்த இரண்டு நிலைக்கும் நடுவில் தியானம் நடக்கிறது.. அதாவது தூக்கத்தில் இருப்பது போல் மனம் அமைதியாகவும் அதே சமயம் அசைந்து கொண்டிருக்கும்போது எப்படி விழிப்பு நிலையில் இருக்கிறோமா அதே போல் இருந்தால் (Silent and Alert)  அது தியானம் நடப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது..


சாதாரணமாய் இருப்பது என்பது ஈகோ இல்லாத நிலை.. பிறப்பும் இறப்பும் எல்லா கணமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.. Life and Death happening simultaneously.. நாம் மூச்சு எடுப்பது (Inhalation)  பிறப்பு & நாம் மூச்சு விடுவது  (Exhalation) இறப்பு.. 


மூச்சு வெளியே விடும்போது ஒரு அமைதியான நிலையை உணர்வோம்..A Deep Peaceful state.. நாம் ஆழமாக மூச்சு விட்டால்.. உடல் உடனே ஆழமான மூச்சு எடுக்கும்..(It happens ) மூச்சு விடுவதில் கவனம் கொண்டு அதாவது இறப்பில் கவனம் கொண்டோமானால்.. இந்த ஷணத்தில் நிலைத்திருக்க முடியும்.. இந்த நிலையில் ஈகோவிற்கு வாய்ப்பில்லை.. ஈகோ என்பது Movement..Time! Also Seriousness is Ego! விளையாட்டாக.. அன்பாக இந்த சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை மட்டும் சந்தோஷமாக செய்து கொண்டு.. வந்தால் அதுவே சாதாரணமாய் வாழ்வது.. அதுவே Extraordinary State ..


ஓம் சாந்தி..


நாம் தொடர்வோம்..

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்

news

சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

news

ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்

news

எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!

news

இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!

news

சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!

news

நீலத்திரைக்கடலோரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்