அறிவுக் கூர்மையும் புத்திசாலித்தனமும் (Intellect and Intelligence)

May 15, 2026,06:49 PM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


அறிவுக்கூர்மை என்பது மைன்ட் சம்மந்தப்பட்டது.. அது இதுவரை படித்த விஷயங்கள், கேள்விப்பட்ட விஷயங்கள் இவற்றுக்கான தொகுப்பு.. அவை எல்லாமே வெளியில் இருந்து வந்த விவரங்களை சேமித்து வைத்த தொகுப்பு..


பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள், நண்பர்கள் மதவாதிகள் சொன்ன விஷயங்கள், படித்த புத்தகங்கள் இவற்றை அடிப்படையாக கொண்டது..


இன்பர்மேஷன் இல்லை என்றால் இதற்கு அதிக மதிப்பில்லை…


புத்திசாலித்தனம் என்பது அடிப்படையிலேயே வித்தியாசப்படுகிறது.. தியானத்தினால் மட்டுமே புத்திசாலித்தனம் ஞானம் வர வாய்ப்பு இருக்கிறது.. இதற்கு ரெடிமேட் பதில்கள் கிடையாது..  புத்திசாலித்தனம் புரிதலை அடிப்படையாகக் கொண்டது.. ஒவ்வொரு சிச்சுவேஷனுக்கு ஏற்றார் போல் பதில் கொடுக்கும் தன்மை மாறுகிறது..




ஆன்மீக பாதையில் பல வழிகள் உள்ளன.. ஏனென்றால் பலவிதமான மனிதர்கள் இருப்பதால் ஒவ்வொருவருக்கும் வேறு வேறான வழிகள் தேவைப்படுகிறது.. Every human being is unique.. புத்தர், மகாவீரர், ஜே கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் மிகுந்த அறிவுக்கூர்மை ( Great Intellects ) கொண்டவர்கள்.. புத்தரும் மகாவீரரும் யாரையும் நம்ப வேண்டாம் என்றும் தாங்கள் கொடுத்திருக்கிற தியான முறைகளை பின்பற்றி வந்தால் ஞானம் அடைய முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்..


ராமகிருஷ்ண பரமஹம்சர், மீரா போன்றவர்கள் பீலிங் டைப்…அவர்கள் பக்தியின் மூலம் இறைவனை அறிந்தவர்கள்.. ஆடுதல் பாடுதல் மூலமாக தங்களை வெளிப்படுத்துபவர்கள்..


ஒரு சிறிய கதையை பார்ப்போமா? 


காஷ்முஷ் ஒரு தத்துவவாதி. அவர் வங்காளதேசத்தில் வாழ்ந்து வந்த ஒரு நாத்திகர். அதி புத்தி கூர்மை உடையவர் என்று பலரால் பாராட்டப்படுபவர். பல மேடைகளில் தன்னுடைய அறிவார்ந்த பேச்சுக்களால் பெரும் புகழ் பெற்றிருந்தார்.  அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரை  தன்னுடைய வாத திறமையால் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் சந்திக்க சென்றார்.. இவரோ அதிகம் படித்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் படிப்பறிவு இல்லாதவர்…


என்ன நடக்கிறது என்று பார்க்க பெரும் கூட்டம் கூடியது.. 


காஷ்முஷ் முதலில் தனது வாதத்தை தொடங்கினார்.. ஏன் கடவுள் இல்லை என்று கூறி வரிசையாக மிக அழகாக வாதம் செய்தார்..


அதைக் கேட்டுக் கொண்டே வந்த ராமகிருஷ்ணர் மிக சந்தோஷமாய் ரசித்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்..


இதை பார்த்த காஷ்முஷ் இன்னும் பல வாதங்களை முன் வைத்தார்.. இப்போது ராமகிருஷ்ணர் மிக சந்தோஷத்துடன் ஆட ஆரம்பித்தார்.. இவருக்கு ஒன்றும் புரியவில்லை..


நீங்கள் பதில் வாதம் செய்யாமல் இப்படி சந்தோஷப்பட்டு ஆடுவதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா என்று காஷ்முஷ் கேட்டார்..


ராமகிருஷ்ணர் பதில் சொன்னார்.. நீங்கள் எவ்வளவு அழகாக பேசுகிறீர்கள்.. இப்படி ஒரு புத்தி கூர்மை கடவுளினால் மட்டுமே வர முடியும்..


அத்தோடு நான் அதிகம் படிக்காதவன்.. என்னாலேயே இறைவனே அறிந்து கொள்ள முடிந்தது என்றால்.. இவ்வளவு புத்திக் கூர்மை உடைய நாத்திகரான தாங்கள் ஆன்மீகவாதியானால் எவ்வளவு பெரிய பக்தராக இருப்பீர்கள் என்று நினைத்தால் .. எனக்கு சந்தோஷத்தில் துள்ளி ஆட ஆரம்பித்து விட்டேன்..


இதைக் கேட்ட காஷ்முஷ்.. இப்படி ஒரு ஆன்மீகவாதியை பக்தரை நான் இதுவரை பார்த்ததில்லை.. நீங்கள் பதில் கூறும் விதத்தில்…நீங்கள் என்னை நடத்திய விதத்தில்.. உங்கள் அணுகு முறையில் எனக்கு கடவுளை பார்ப்பது போல் இருக்கிறது என்று தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்..


நாம் தொடர்வோம்..

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்

news

சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

news

ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்

news

எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!

news

இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!

news

சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!

news

நீலத்திரைக்கடலோரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்