இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!

Jul 13, 2026,05:24 PM IST

- பாரதிராஜன்


1938 ல் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, உட்பட 17 மொழிகளில் பாடியவர். 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். தேசிய விருது 4முறை, மாநில விருது தமிழகம், ஆந்திரா,கர்நாடகம் மற்றும் கேரளா உள்பட 33 முறை.  2013ல் மத்திய அரசின்  பத்மபூஷன் விருது. 


ஸ்ரீதேவி,ராதா, ஜெயபிரதா, சுகன்யா &குஷ்பு  நடிகைகளுக்கு  குரல் கொடுத்தவர். அன்னக்கிளி பாடல் மட்டுமல்ல படமும் பிரபலமாக காரணம்ஆக இந்த  இசையரசி தற்போது விண்ணில் பாடச் சென்று விட்டார்


பாடும் நிலா ஜானகி அம்மா இன்னும் நம்ம கூடதான் இருக்காங்க. அவருடைய குரல் இன்னும் நம்ம வானொலியில், நம் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.




பாடும் நிலா ஒன்று இருந்தது  

தென்னிந்தியா முழுதும் ஒளி வீசியது.


செந்தூரப்பூவே சிரித்தது அவர் குரலில்  

மலர்களே மலர்களே மலர்ந்தது அவர் குரலில்  

ஒரு குரல் - ஆயிரம் முகம் காட்டியது


காலம் போனாலும் குரல் போகாது  

வயது ஆனாலும் இசை மூப்படையாது  

டேப் ரிகார்டரில், மொபைலில், நம் நெஞ்சில்  

ஜானகி என்றும் பாடிக்கொண்டே இருப்பார்


நிலா மறையாது...  

வெறும் மேகம் மறைக்கும் அவ்வளவுதான்  

மேகம் விலகியதும் மீண்டும் ஒளி வரும்  

அதுபோல ஜானகியின் பாடல் என்றும் நிலைக்கும்


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்