எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

May 08, 2026,02:34 PM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


எண்ணங்களை நிறுத்த முடியுமா? ஆன்மீகப் பாதையில் எண்ணங்கள் தான் நமக்கு பிரச்சினை என்று சொல்லப்பட்டு வந்திருக்கிறது.. எண்ணங்கள் குறைந்தால்..இல்லாத போனால் அமைதியும் சந்தோஷமும் நிலைக்கும்.. நாம் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்..


எண்ணங்களை நிறுத்தும் முயற்சி என்பது நடக்காத ஒன்று.. ஒரு திருடனே போலீஸ் வேடம் போட்டு திருடனை பிடிப்பது போன்றது இந்த முயற்சி.. எண்ணங்களே எண்ணங்களை எவ்வாறு நிறுத்த முடியும்? அதை கண்ட்ரோல் செய்வது நிறுத்த முயற்சிப்பது.. அதை அதிகரிக்குமே அன்று நிறுத்துவதற்கான வழி அல்ல..


முரண்பாடுகள் (Conflicts) இருப்பதே எண்ணங்கள் அதிகமாக இருப்பதற்கு காரணம்.. எல்லா எண்ணங்களும் நான் என்ற எண்ணத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.. அந்த நான் என்பது நம் குழந்தையாக இருக்கும்போது இருந்து சேர்த்த விஷயங்கள்.. பழக்கங்கள் நம்பிக்கைகள் அனுபவங்கள் இவற்றை வைத்து எழுப்பப்பட்ட ஒரு இமேஜ்..

அது உண்மை அல்ல என்று பார்க்க ஆரம்பிக்கும் போது.. எண்ணங்கள் வலுவிழக்கும்.. ‘அந்த நான்’ எதுவாகவோ ஆக வேண்டும்.. மாற்றிக் கொள்ள வேண்டும்.. என்ற முயற்சியே முரண்பாடுகளுக்கு காரணம்.. 




ஒரு குருவின் அருளால் அவருடன் தொடர்பில் இருக்கும் போது அந்த மாற்றம் தானாகவே நடக்கும்.. அவருடைய பேச்சுக்களோ.. தத்துவங்களோ அல்ல.. அவருடைய எனர்ஜி நம்முடைய தடைகளை அகற்றி நமக்குள்ளே உள்ள எனர்ஜியை மாற்றியமைக்கும்..


முயற்சியே எடுக்காமல் எப்படி அமைதியாகுவது.. அமைதியாக இருக்க சொன்னால் எண்ணங்கள் தாறுமாறாக ஓடுகிறது.. உடனே நாம் அமைதியாக இருக்க முயற்சி எடுப்போம்.. அந்த முயற்சியே மேலும் எண்ணங்களை அதிகரிக்கும்.. பயத்தையும் உண்டு பண்ணும்.. எண்ணங்கள் மேகங்களைப் போன்றது.. அதை அப்படியே விட்டுவிட்டு நாம் நாமாக இருந்தால் அது தானாகவே நிற்கும்.. 


ஒரு சிறிய கதையை பார்ப்போமா..


காஷ்முஷ் சமீபத்தில் திருமணம் ஆன தன்னுடைய மகன் வீட்டிற்கு சென்றார்.. மூன்று நாட்கள் இருப்பதாக சொல்லி அங்கு சென்றார்.. மூன்று நாட்கள் தாண்டி ஒரு வாரம் அங்கிருந்தார்.. பிறகு ஒரு மாதம் கழிந்தது.. அவர் அங்கேயே இருந்தார்..


அவருடைய மகனுக்கும் மருமகளுக்கும் கவலையாகிவிட்டது.. இவரை எப்படி அனுப்புவது என்று யோசிக்க ஆரம்பித்தார்கள் அப்போது மகன் தன் மனைவியிடம் சொன்னான்.. நீ ஒரு சூப் தயாரி.. அதில் உப்பு அதிகமாக இருக்கிறது என்று நான் உன்னை திட்டுகிறேன்.. நீ நன்றாகத்தான் இருக்கிறது என்று பதில் சொல்.. நாம் இரண்டு பேரும் சண்டை போட ஆரம்பிக்கலாம்.. அப்போது அப்பாவிடம் சூப் பற்றி கருத்து கேட்போம்.. அவர் உப்பு அதிகமாக இருக்கிறது என்று சொன்னால் நீ சண்டை போட்டு அவரை வெளியே போங்கள் என்று சொல்லிவிடலாம்.. அவர் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் நான் அவரை திட்டி வெளியே போக சொல்கிறேன்..


அதேபோல் சூப்பை வைத்து இருவரும் சண்டை போட ஆரம்பித்தார்கள்.. காஷ்முஷிடம் மகன் என்னப்பா சூப் எப்படி இருக்கிறது என்று கேட்டான்.. காஷ்முஷ் பதில் சொன்னார்.. எனக்கு பொருத்தமாக இருக்கிறது..(It perfectly suits me!) 


நமது மைண்ட் இதைப்போலத்தான்.. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஏதாவது பேசிக் கொண்டே தான் இருக்கும்.. நாம் அதை விட்டுவிட்டு நமது நிலையில் இருந்தால்.. எண்ணங்கள் தானாகவே வலு இழக்கும்..


நாம் தொடர்வோம்..

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

news

GenZ effect: அடியோடு மாறுது உலகம்.. இது மாற்றமா? ஏமாற்றமா?

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

அதிமுக-திமுக இணைந்து ஆட்சி அமைத்தால்.. விஜய் எடுக்க போகும் அடுத்த அதிரடி முடிவு!

news

அரசுப் பள்ளிகளில் டாப் தேர்ச்சி ஈரோடு.. முதல் 5 மாவட்டங்கள் விவரம்!

news

பிளஸ்டூ தேர்வில்.. சென்டம் போட்ட தங்கங்கள்.. கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் டாப்!

அதிகம் பார்க்கும் செய்திகள்