இறப்பு வாழ்வின் உச்சக்கட்டம் (Death is the crescendo of Life)

Mar 21, 2026,02:32 PM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


இறப்பு  என்பது மனிதனைப் பொறுத்தவரை ஒரு அபசகுன வார்த்தையாக.. நிகழ்வாக இருக்கிறது.. சாவு என்ற சொல்லே அத்தனை பயத்தை உருவாக்குகிறது ஏன் அப்படி? தூங்குதல் என்பது நமக்கு பயமாக இல்லை தூங்குகிறோம் விழித்துக் கொள்கிறோம் அது நமக்கு பழகி விட்டது.. ஆனால் சாவு நம் அடுத்தவரின் சாவை தான் பார்க்கிறோம்.. நம் சாவை நாம் பார்க்க முடியவில்லை.. அந்த அனுபவம் நமக்கு இல்லை என்பதனால் பயப்படுகிறோம்.. இல்லையா? 


ரொம்ப லாஜிக்கலாக யோசித்தாலும் அறிவியல் பூர்வமாக பார்த்தாலும்.. உயிர் இந்த உடல் எடுக்கிறது..

உடல் மண்ணிலிருந்து உருவாகிறது.. உடல் மண்ணில் விளையும் பொருட்களை சாப்பிட்டு வளர்கிறது..உயிர் பிரிகிறது.. உடல் மண்ணுக்கு செல்கிறது..


நாம் உடலா? மனமா? இல்லை உயிரா?


மனம் என்பது இந்த சமுதாயத்தினால் நமக்கு கொடுக்கப்பட்டது.. அத்துடன் நம்முடைய அனுபவங்களை ஞாபகத்தில் சேர்த்து வைத்துக் கொள்கிறோம்.. (Mostly consisting of our belief systems & accumulation of experiences ) நாம் உயிர் என்றால் நாம் இறப்பதில்லை.. இறக்க வாய்ப்பு இல்லை.. 


பின் ஏன் இந்த பயம்? உடலோடு அடையாள படுத்திக் கொள்வதால்.. உடலுடன் ஏற்பட்ட சொந்தங்களோடு அடையாளப்படுத்திக் கொள்வதால்.. இழப்பதற்கு பயப்படுகிறோம்.. (All fear is because of attachments).. 


பற்றுக்கொள்ளுதல் சரி என்று உலகமே நம்புவதால் அது சரி என்று ஆகிவிடாது இல்லையா? நாம் இந்த உடல் தான் என்று குழந்தை முதல் சொல்லப்பட்டு வந்திருக்கிறோம்.. அதை நம்பியும் வந்திருக்கிறோம்.. ஒரு நொடி இந்த உடலை விட்டு வெளியே வந்து பார்த்தோமானால் ( இறப்பு தியானம்) நமக்கு சாவை பற்றிய பயம் போய்விடும்.. இந்த பயம் இல்லாத மனிதனால் தான் முழுமையாக வாழவும் முடியும்.. 




முழுமையாக வாழ்தல் என்றால் என்ன? 99 சதவிகிதம் பேர் வாழ்வதே இல்லை என்று கூட சொல்லலாம்.. அடுத்தவர் சொன்னபடி சமுதாய எதிர்பார்ப்பின் படி…நமது உள்நிலை என்ன என்பதை பற்றி ஒரு கவனமும் கொள்ளாமல் வாழ்ந்தோமானால் அது வாழ்க்கையே அல்ல.. முழுமையாக வாழ்தல் .. இறப்பு என்றால் என்ன என்று புரிந்து கொள்வதால் மட்டுமே நடக்கும்.


இறப்பு என்று சொல்லும் போது எதையோ இழக்கிறோம்.. எது எல்லாம் இழக்கிறோம் இதை நாம் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால்.. உடலை இழக்கிறோம் நாம் சேர்த்து வைத்த பொருட்களை இழக்கிறோம் .. நாம் கற்றுக் கொண்ட எல்லாவற்றையும்.. நாம் சேர்த்து வைத்த Title களை ( டாக்டர், இன்ஜினியர்,வக்கீல் அரசியல்வாதி இவை போன்றவை) நம் வாழ்க்கையில் சந்தித்த..உருவாக்கிக் கொண்ட உறவுகளை இழக்கிறோம்.. 


எதுவுமே நிரந்தரம் இல்லை என்று தெரிந்தும் நம் வாழ்க்கையை வாழ இவை எல்லாவற்றையுமே சம்பாதிக்கிறோம்.. இது அத்தியாவசியமானது தான்..ஒரு நாள் அனைத்தையுமே இழப்போம் என்று தெரிந்தும் ஒவ்வொன்றின் மீதும் பற்றுக்கொள்கிறோம்.. பற்றி கொள்கிறோம்.. தனியாக இருக்க பயம் கொள்கிறோம்.. எல்லா பயங்களுமே கொஞ்சம் ஆழமாக பார்த்தால் இறப்பு பற்றியதுதான்..


நம் தூக்கத்தில் கூட இவை அனைத்தையுமே தற்காலிகமாக இழக்கிறோம்.. இல்லையா? ஆழ்ந்த தூக்கத்தில் நம் உடலை உணர்வதில்லை இந்த உலகமும் நமக்கு இருப்பதாய் தெரியவில்லை.. தூக்கத்தில் நமக்கு விழிப்பு நிலை இருந்தால்.. நமது சாவை கூட நம்மால் பார்க்க இயலும் என்று யோகிகளும் ஞானிகளும் காலம் காலமாக சொல்லி வந்திருக்கிறார்கள்.. 


ஒரு சிறிய கதையை பார்ப்போமா ?


காஷ்முஷ் ஒரு சேட்டைக்கார சிறுவனாக இருந்தார்.. அவருடைய வீட்டில் அவருடன் சேர்ந்து பிறந்தவர்கள் ஆறு பேர்.. இவரை சமாளிப்பது கடினம் என்பதால் அவருடைய பாட்டி வீட்டில் வளர்ந்தார்.. அவருடைய தாத்தா ஒரு கிராசரி ஷாப் வைத்திருந்தார்.. காஷ்முஷ்க்கு பாட்டி தாத்தா மேல் மிகவும் பிரியம்.. அவர்களும் இவர் என்றால் கொள்ளை பாசம்..


காஷ்முஷ் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று அவருடைய தாத்தா இறந்து விட்டதாக ஒருவர் வந்து சொல்லவும் அதிர்ச்சி அடைந்தார்.. 


வீட்டிற்கு அவசரமாக சென்று பார்த்தபோது தாத்தாவின் இறந்த உடல் வீட்டின் நடுவில் கிடத்தப்பட்டிருந்தது.. அவர் வெளியூருக்கு சென்று கடைக்கு தேவையான  கிரசரிஸ் வாங்கிக்கொண்டு வரும் வழியில் வண்டியில் அமர்ந்தபடியே ஒரு புன்னகையுடன் உயிர் பிரிந்திருந்தது..


காஷ்முஷ்க்கு அழுகை பீறி கொண்டு வந்தது.. அழுகை அடக்கிக் கொண்டார்.. காரியங்கள் முடிந்தன.. திடீரென்று தாத்தா இறந்து விடுவார் என்று நினைக்கவே இல்லை..காஷ்முஷ் ரொம்ப சோகமாக மாறிவிட்டார்.. அவர் விளையாடுவது படிப்பது எல்லாமே மிகவும் குறைந்து விட்டது.. Depression ல் ஆழ்ந்தார்..


அவரது நண்பர்கள் அவரை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றனர்.. திடீரென்று நடந்ததை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை என்றே புலம்பி கொண்டிருந்தார்.. 


சில மாதங்களில் அவரது பாட்டி நோய்வாய்ப்பட்டார்.. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர் கூறினார்.. கேன்சருக்கு ட்ரீட்மென்ட் என்று பல முறைகளும் முயற்சி செய்யப்பட்டன.. பாட்டி நோயின் வலியில் மற்றும் சிகிச்சைகளால் பல மாதங்கள் கஷ்டப்பட்டார்.. பிறகு ஒரு நாள் மரணம் அடைந்தார்.. 


இப்போது காஷ்முஷ் புரிந்து கொண்டார்.. இறப்பு என்பது அவரது பாட்டிக்கு எவ்வளவு பெரிய ரிலீஃப் என்று..

தன்னுடைய Depression ல் இருந்து வெளிவந்தார்..


நாம் உயிர் என்று உணராத வரை வாழ்க்கை என்பது ஒரு போராட்ட சுழற்சியில் ( வாழ்க்கைச் சக்கரம்) சென்று கொண்டிருக்கும்.. நாம் உயிர் என்று உணர்வது எப்படி.. நாம் எதெல்லாம் அல்ல என்று ஒவ்வொன்றாக நாம் உடல் அல்ல நம் மனம் அல்ல நாம் நம்முடைய பீலிங்ஸ் அல்ல என்று பார்த்துக் கொண்டே வந்தால் எது நாமோ அது நிலைபெறும்.. வாழ்க்கை என்பது தொட்டிலிலிருந்து மயானம் என்பதல்ல.. நாம் யார் என்று உணர்வதற்கான ஒரு யாத்திரை..


இங்கே எழுதப்பட்டிருப்பதை ஆர்வத்துடன் படித்து உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால்.. நீங்கள் இந்த யாத்திரையை ஆரம்பித்து விட்டீர்கள்.. 


மிக்க நன்றி..

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கவிதைகள்.. கனவுகளால் இணைத்து.. காலமெல்லாம் வாழும் கலைவிழா!

news

வயலுக்கா விழலுக்கா அறியாத போதும்.. பெய்கின்றது மழை!

news

இரு விழிகள்!

news

தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

news

10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ

news

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்