சென்னை: தமிழகத் தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சசிகலா தலைமையிலான அகில இந்திய புரட்சித் தலைவி திராவிட முன்னேற்றக் கழகம் (அஇபுதமுக) கணிசமான வாக்குகளைப் பிரித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வெற்றி வாய்ப்பைத் தட்டிப்பறித்துள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 4 முக்கியத் தொகுதிகளில் அஇபுதமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள், அதிமுக - பாஜக உள்ளடங்கிய கூட்டணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.
வாக்குகளைப் பிரித்த 'தென்னந்தோப்பு' சின்னம் :
தமிழக சட்டசபை தேர்தலில் சசிகலா மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இணைந்து தனியாக கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர் கொண்டனர். சசிகலா ஆதரவு வேட்பாளர்கள் 'தென்னந்தோப்பு' சின்னத்தில் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகளின் படி, தென் மாவட்டங்களில் சசிகலாவின் கட்சிக்குக் கிடைத்துள்ள ஆதரவு, பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணியான NDA-விற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அஇபுதமுக வேட்பாளர்கள் பிரித்த வாக்குகளால் NDA கூட்டணி தோல்வியடைந்த 4 தொகுதிகளின் புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:

முதுகுளத்தூர்: இந்தத் தொகுதியில் சசிகலா தரப்பு வேட்பாளர் 40,422 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அந்தத் தொகுதியின் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது.
உசிலம்பட்டி: தென் தமிழகத்தின் முக்கியத் தொகுதியான இங்கு அஇபுதமுக 16,620 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சாத்தூர்: இங்கு அஇபுதமுக வேட்பாளர் 11,602 வாக்குகளை ஈர்த்துள்ளார். இது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் வெற்றியை தட்டி பறித்துள்ளது.
தென்காசி: தென்காசி தொகுதியில் 7,715 வாக்குகளைப் பெற்று NDA கூட்டணியின் வெற்றியைப் பாதித்துள்ளது.
அரசியல் முக்கியத்துவம் :
இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன. அதிமுகவின் வாக்கு வங்கியில் சசிகலா தரப்பினர் கணிசமான ஓட்டுகளைப் பிரித்திருப்பதே NDA கூட்டணியின் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிகம் உள்ள தொகுதிகளில் சசிகலாவின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதையே இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.
"சசிகலாவின் வேட்பாளர்கள் பெற்ற இந்த வாக்குகள் மட்டும் NDA கூட்டணிக்குச் சென்றிருந்தால், இந்த நான்கு தொகுதிகளிலும் முடிவு தலைகீழாக இருந்திருக்கும்" என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். வரும் காலங்களில் அதிமுக மற்றும் சசிகலா இடையிலான அரசியல் நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்தே தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
{{comments.comment}}