சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வர் விஜய் காரசாரமாகவும் அதிரடியாகவும் உரையாற்றினார்.
பேரவையில் சட்டென எழுந்து நின்ற முதல்வர் விஜய், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகள் மற்றும் விமர்சனங்களுக்குப் புள்ளி விவரங்களுடனும் எச்சரிக்கை தொனியிலும் பதிலளித்துப் பேசினார்.
“எதை எப்போ ஓபன் பண்ணணுமோ, அது அப்போ ஓபன் ஆகும்”

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து "ஆதாரம் எங்கே?" எனக் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதற்குப் பதிலளித்த முதல்வர் விஜய், “இதை நான் சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன்; ஆனால், ஆதாரம்.. ஆதாரம் என்று கேட்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு நிதியமைச்சர் 3 துறைகளை ஆராய்ந்து அதன் கோப்புகள் என்னுடைய மேசையில் இருக்கிறது என்று கூறினார். அதை அவர் போகிறப் போக்கில் எல்லாம் சொல்லவில்லை; அவை உண்மையில் என் மேசையில் தான் உள்ளன; அத்தனையும் ஆதாரத்தோடு உள்ளன” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதை open பண்ண வெச்சுராதீங்க, எதை எப்போ open பண்ணணுமோ, அது அப்போ open ஆகும்” என்று மிகவும் அழுத்தமாகத் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி பதில் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு எதிர்க்கட்சிகளுக்கு பகீர் கொடுப்பதாக இருந்தது.
இடைத்தேர்தல் குறித்த காரசாரமான கருத்து
அரசியல் விமர்சனங்கள் மற்றும் இடைத்தேர்தல் குறித்துப் பேசிய முதல்வர் விஜய், “மக்களிடம் எப்போது பேசணும்.. என்ன பேசணும்.. எப்படி பேசணும்... எல்லாம் பேசிவிட்டுத்தான்... அன்பா, ஆசையா எங்க எல்லாரையும் கொண்டு வந்து இங்க உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசுவேன்.. பேசக்கூடாது என்றெல்லாம் ஒன்றுமில்லை; இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்கணும்ல” என்று கிண்டலாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் பரபரப்பு
சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்த சூழலில், முதல்வர் விஜய் சட்டென எழுந்து நின்று முன்வைத்த இந்த வாதங்கள் ஆளும் தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகத் தக்க பதிலடி கொடுத்த முதலமைச்சரின் இந்த உரை, தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதை விட முக்கியமாக, நிதியமைச்சர் கொடுத்து முதல்வர் விஜய்யின் டேபிளில் இருக்கும் அந்த பைலில் அப்படி என்ன ஆதாரம் இருக்கிறது? அது யாருக்கு எதிரானது? அதிரடி ஆக்ஷனுக்கு தயாராகிறதா தவெக அரசு? முதல்வர் விஜய் விடுத்துள்ள இந்த மறைமுக எச்சரிக்கை யாருக்கு? முதல்வரின் குறி அதிமுக.,விற்கா அல்லது திமுக.,விற்கா? என்பது போன்ற கேள்விகளையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}