சென்னை: போட்டி திமுக, தவெகவுக்கு இடையில்தான் என்று விஜய் சொன்னார். சொன்னபடி நடந்து விட்டது. தவெக வென்று விட்டது. அடுத்த போட்டி இப்போது சட்டசபைக்கு நகர்கிறது. அங்கு தவெக தலைவர் விஜய்க்கு எதிர்வரிசையில், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் அமர்வார் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தவெக முதலிடத்தைப் பிடித்து தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சில கட்சிகளின் ஆதரவுடன் அது ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது. அதேபோல தவெக தலைவர் விஜய், முதல்வராகப் பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் ஆட்சியை இழந்துள்ள திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளது. ஆரம்பத்தில் அதிமுகவுக்கு 2வது இடம் கிடைப்பது போல இருந்தது. ஆனால் பிற்பகலுக்கு மேல் நிலைமை மாறி,திமுக 2வது இடத்தைப் பிடித்து விட்டது. இப்போது 54 இடங்களுடன் 2வது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. அதிமுக 3வது இடத்திற்குப் போய் விட்டது. எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை எடப்பாடி பழனிச்சாமி இழந்துள்ளார்.

இந்த நிலையில் திமுக சார்பில் யார் எதிர்க்கட்சித் தலைவர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளதால், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த துரைமுருகனுக்கு அது கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் காட்பாடி தொகுதியில் தோற்று விட்டார்.
இந்த நிலையில் துணை முதல்வராக தற்போது உள்ள உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அவரை எதிர்க்கட்சித் தலைவராக்கி, சிறப்பான முறையில் செயல்பட வைத்தால் வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் பலமான தலைவராக மாற்றி விடலாம், திமுக மீண்டு வர அது உதவும் என்று திமுக கணக்கில் உள்ளதாக தெரிகிறது.
மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கும் தன்னை ஒரு சிறந்த தலைவராக மாற்றிக் கொள்ள இது நல்ல வாய்ப்பாகவும் அமையும் என்பதால் திமுக தரப்பிலும் தற்போது தோல்வி சோகத்திலிருந்து மீண்டு வர ஆரம்பித்துள்ளனர்.
முகம் மலரோ தாமரைப்பூ.. மனம் மணமோ மல்லிகைப்பூ!
வேறு முகங்கள்!
நூலகமும் நானும்.. மயிலாப்பூர் முதல் பாஸ்டன் வரை!
அமைதியா இரு
Short Story by Sudha Thirunarayanan: பை!
தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
{{comments.comment}}