மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்.. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

May 04, 2026,09:18 PM IST

சென்னை: மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாகவும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இனி திமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


சட்டசபைத் தேர்தல் தோல்வி தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:


கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.




திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.


நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!


எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.


எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.


இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

news

"பொய் வழக்கு...தில்லுமுல்லு அரசியல்!" – மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு கண்டனம்

news

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விளக்கம்

news

அதிமுக பிரமுகர் மன்னன் கைது: தவெக எம்எல்ஏ-விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் நடவடிக்கை!

news

தீபாவளி பண்டிகை 2026 : தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு!

news

Deepavali Special Buses: தீபாவளி பண்டிகை - தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

news

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்!

news

ரூ.100-க்கு 10 காய்கறிகள்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்