எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
Dec 06, 2025,05:05 PM IST
சென்னை: எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அயோத்தி இங்கிலாந்திலோ ஐரோப்பாவிலோ இல்லை, இந்தியாவில்தான் உள்ளது. எனவே தமிழ்நாடு அயோத்தியைப் போல மாறுவதில் எந்தத் தவறும் இல்லை. ராமர் ஆட்சி பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி ராமர் ஆட்சி போல வர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? கடந்த தேர்தலில் ஆர்எஸ்எஸ் பாஜகவை படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் பேலவா?