கரூர் சம்பவத்தில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை.. விஜய் கேள்வி கேட்பது தவறு.. சீமான்!

Meenakshi
Oct 02, 2025,05:06 PM IST

விருதுநகர்: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோவில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை. இருந்திருந்தால் அது வெளிப்பட்டிருக்கும். கரூர்  சம்பவம் குறித்து விஜய் கேள்வி கேட்பது தவறு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


விருதுநகர் மாட்டத்தில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், விஜய் பேசியது திரைப்பட வசனம் போல் உள்ளது. இது நல்ல அணுகுமுறை அல்ல. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோவில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை. இருந்திருந்தால் அது வெளிப்பட்டிருக்கும். மற்ற இடத்தில் இல்லாமல் கரூரில் மட்டும் இப்படி நடந்தது எப்படி? என விஜய் கேட்டது தவறு.




திரைக்கவர்ச்சியில் விஜய் நாட்டை ஆள முயற்சிக்கிறார். திரை மயக்கம், திரை போதையில் உள்ளார். விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்? சிம் சார் என விஜய் கூறியது சிறுபிள்ளைத்தனம். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று அவர் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை உணராமல் பேசியுள்ளார்.