சென்னை: ஆபத்தான அரசியலை கையில் எடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய். வெறுப்பு அரசியலை பேசி வரும் விஜயால் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. கரூர் துயரத்தில் விஜய்க்கு கொஞ்சம் கூட கவலையில்லை கலங்கவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசும், காவல்துறையும் அஞ்சுகிறதா? தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும்.
விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாததற்கு காரணம் என்ன? திமுக - தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா? விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது யார்? ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகம் என நம்பி விடுவார்கள் என விஜய் வீடியோவில் அவ்வாறு பேசியுள்ளார். மூன்று நாட்கள் சும்மா இருந்துவிட்டு ஆர்எஸ்எஸ் தலைமை சொன்னதும் வீடியோ வெளியிடுகிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. விஜய்யை சுற்றி இருக்கும் அனைவரும் பாஜக பயிற்சி பட்ட்றையில் பயிற்சி பெற்றவர்கள் தான்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இருக்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. திமுகவின் வாக்குகளை பிரிப்பதே பாஜகவின் திட்டம். அதிமுக கூட்டணியில் விஜய்யைசேர்த்து கொள்ளமாட்டார்கள். கரூர் துயரத்தில் இருந்து விஜய்யை காப்பற்ற பாஜக முயற்சி செய்கிறது. விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை. முழுக்க முழுக்க பாஜக தூண்டுதலாலே அரசியலுக்கு வந்துள்ளார்.
பாஜக பாதுகாக்க முயல்வதன் மூலம் விஜய்யின் சாயம் வெளுத்துப் விட்டது. அண்ணா ஹசாரே போன்று விஜய்யை பாஜக பயன்படுத்துகிறது. விஜய்யை பயன்படுத்தி அதிமுகவை அழித்து விட்டு அந்த இடத்திற்கு பாஜக வர நினைக்கிறது. விஜய் ஆபத்தாஜ அரசியலை கையில் எடுத்துள்ளார். வெறுப்பு அரசியலை பேசி வரும் விஜய்யால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் பிடிக்க முடியாது.
பாஜக போன்ற சக்திகளிடம் தமிழக மக்கள் சிக்கிக் கொண்டால், எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நிர்மல் குமார், அருண் ராஜ் உள்ளிட்டோர் பாஜகாவால் அனுப்பி வைக்க்பட்டவர்கள். இயக்குனராக பாஜக கூறுவைத விஜய் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். விஜய்யால் திமுகவை பலவீனப்படுத்த முடியுமே தவிர ஆட்சியைப் பிடிக்க முடியாது. குறைந்த பட்ச இரக்க உணர்வே இல்லாமல், இறந்தவர்களை தூக்கிச் சென்று கொண்டிருப்பதை பார்த்த பிறது பாடிக் கொண்டு இருக்கிறார் விஜய். தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் பட தீர்ப்பை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு யு/ஏ சான்று...சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!
மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்
தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்
அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு
'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
{{comments.comment}}