டெல்லி: கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக கேரளம் (Keralam) என மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை இன்று தனது முறைப்படியான ஒப்புதலை வழங்கியுள்ளது.
கேரள சட்டப்பேரவையில் கடந்த 2023ம் ஆண்டு, மாநிலத்தின் பெயரை மலையாள மொழியில் அழைப்பது போலவே அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் 'கேரளம்' என மாற்ற வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மத்திய அரசுக்கு இதற்கான பரிந்துரையை அனுப்பியிருந்தது.

இதனை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. பிறகு மீண்டும் கடந்த 2024 ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை ' கேரளம்' என மாற்ற வலியுறுத்தி 2வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், சேவா தீர்த் வளாகத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கேரளாவின் பெயரை ' கேரளம்' என பெயர் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
பெயர் மாற்றத்திற்கான காரணம்
மலையாள மொழியில் அந்த மாநிலம் தொன்றுதொட்டு 'கேரளம்' என்றே அழைக்கப்படுகிறது. ஆனால், பிற மொழிகளில் அது 'கேரளா' என மருவிவிட்டது. தனது மாநிலத்தின் கலாச்சார மற்றும் மொழி அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}