தேனி: எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காக கட்சி நடத்தினார்கள். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை 1991ல் ஒன்றிணைத்தவர் ஜெயலலிதா என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திறுவுறுவப்படத்திற்கு மரியாதை செய்தார். அதன்பின்னர் தேனியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காக கட்சி நடத்தினார்கள். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை 1991ல் ஒன்றிணைத்தவர் ஜெயலலிதா. தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு ஸ்கூட்டி என 62 வகையான உதவிகளை நாட்டு மக்களுக்கு செய்தவர்.

கட்சிக்கு சோதனை வந்தபோது முதல்வர் பதவியை என்னிடம் கொடுத்தார் ஜெயலலிதா. 2 முறை அவரின் கட்டளையை ஏற்று நான் முதல்வரானேன். ஜெயலலிதா எனக்கு பல்வேறு சூழ்நிலைகளில் நற்சான்று கொடுத்தார். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் சோதனைகளை எதிர்கொள்ள முடியும் என்று கூறி வந்தேன்.
ஜெயலலிதா மறைந்தபிறகு என்னை காட்டாயப்படுத்தி முதல்வராக்கினார்கள். அவர் மறைந்தபிறகு எனக்கு முதல்வராவதில் விருப்பம் இல்லை என்று கூறினேன். எனினும் கட்டாயத்தின்பேரில் 3 ஆவது முறையாக நான் முதல்வரானேன். நான் கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை.
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன். அதிமுகவின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கவே தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தைத் தொடங்கினேன். பாஜக கூட்டணி வலுவாக உள்ளது அதனால், அவர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணி பிரிந்து கிடக்கிறது. பிரிந்து கிடக்கும் கூட்டணி எப்படி வெற்றி பெறும். டிடிவி தினகரன் மீது உயர்ந்த , உச்சபட்ச மரியாதை வைத்துள்ளேன். அவர் பேசுவதற்கு மேலாக என்னால் பேச முடியும். அரசியல் நாகரிகம் கருதி நான் பேசமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}