இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்

Feb 24, 2026,06:33 PM IST

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியலின் மிகச்சிறந்த வழிகாட்டியுமான தோழர் இரா. நல்லகண்ணு (100) உடல்நிலை நலிவடைந்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் குணமடைய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணு, ஆரம்பத்தில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


அவரது உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீராபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தோழர் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை தற்போதும் பின்னடைவிலேயே இருந்து வருகிறது. மக்களுக்காகப் போராடி வந்த அவர் தற்போது இயற்கையுடன் போராடி வருகிறார். மருத்துவர்கள் அவருக்குத் தேவையான தீவிர சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிக்கையை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.




101 வயதாகும் தோழர் நல்லகண்ணு, தமிழக அரசியலில் நேர்மைக்கும் எளிமைக்கும் இலக்கணமாகத் திகழ்பவர். மிக மிக சாமானிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர். எளிமையானவர். மக்களுக்காகவே தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர். 


1924ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பிறந்த இவர், இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். நெல்லைச் சதி வழக்கில் சிறைவாசம் அனுபவித்தவர். சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.


தமிழக அரசு இவருக்கு வழங்கிய 'தகைசால் தமிழர்' விருதின் பரிசுத்தொகையான 10 லட்சம் ரூபாயை, அப்படியே அரசுப் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கிய பெருந்தகை. மணல் கொள்ளைக்கு எதிராகவும், தாமிரபரணி உள்ளிட்ட நதிகளைப் பாதுகாக்கவும் சட்ட ரீதியாகவும், கள ரீதியாகவும் பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.


தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் கட்சித் தொண்டர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் குவிந்து வருகின்றனர். தமிழகத்தின் "மனசாட்சி" என்று அழைக்கப்படும் தோழர் நல்லகண்ணு உடல்நலம் தேறி மீண்டும் வர வேண்டும் என மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

National Film awards 2024: 72வது தேசிய திரைப்பட விருதுகள்.. அமரனுக்கு 3.. மம்முட்டி சிறந்த நடிகர்

news

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

தமிழ்நாடு நாள்.. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் களை கட்டிய மாணவர்களுக்கான போட்டிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்