National Film awards 2024: 72வது தேசிய திரைப்பட விருதுகள்.. அமரனுக்கு 3.. மம்முட்டி சிறந்த நடிகர்

Jul 18, 2026,07:18 PM IST
டெல்லி: 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வு செய்யப்பட்டார். தமிழ்ப் படங்களுக்கு நிறைய விருதுகள் கிடைத்துள்ளன.

72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் தேசிய அளவில் சிறந்த நடிகராக பிரம்மயுகம் படத்தில் நடித்திருந்த மம்முட்டி தேர்வு செய்யப்பட்டார்.  அவருடன் கார்த்திக் ஆர்யனும் சிறந்த நடிகர் விருதைப் பகிர்ந்து கொள்கிறார்.

அமரனுக்கு 3 விருதுகள்

சிறந்த இயக்குநர் - ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
சிறந்த பின்னணி இசை - ஜி.வி.பிரகாஷ் (அமரன்)
சிறந்த எடிட்டிங் - ஆர். கலைவாணன் (அமரன்)

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்ற அமரன் படம் மொத்தம் 3 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. 



மகாராஜாவுக்கு 2 விருதுகள்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மகாராஜா படம் 2 விருதுகளைப் பெற்றுள்ளது.

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அனல் அரசு (மகாராஜா)
சிறந்த குணச்சித்திர நடிகை - சச்சனா (மகாராஜா)

தமிழுக்குக் கிடைத்த பிற விருதுகள்

சிறந்த தமிழ்ப் படம் - ராயன் 
சிறந்த தமிழ்ப் படங்கள்- மெய்யழகன், கேப்டன் மில்லர் ( சிறப்புப் பாராட்டு)
சிறந்த ஒலி அமை்பபு - ப்ளூ (தமிழ்)
சிறந்த சமூக விழிப்புணர்வுத் திரைப்படம்- கேப்டன் மில்லர் (தமிழ்)

தேசிய விருதுகளைப் பெற்ற பிற கலைஞர்கள் விவரம்

சிறந்த ஒளிப்பதிவு - பிரம்மயுகம் (மலையாளம்)
சிறந்த திரைக்கதை - புஷ்பா 2
சிறந்த வசனகர்த்தா - வெங்கி அட்லூரி (லக்கி பாஸ்கர்)
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - கல்கி  (தெலுங்கு)
சிறந்த பின்னணிப் பாடகி - வைக்கம் விஜயலட்சுமி (மலையாளம்)
சிறந்த பின்னணிப் பாடகர் - அபய் ஜோத்புர்கர் (மராத்தி)
சிறந்த நடன அமைப்பு - விஜய் கங்குலி (இந்தி)
சிறந்த பாடலாசிரியர் - மனோஜ் முன்டாசிர் (இந்தி)
சிறந்த இசை - சஷ்வத் சச்தேவ் (இந்தி)
சிறந்த மேக்கப் - பி. ரவிக்குமார் (தெலுங்கு)
சிறந்த ஆடை வடிவமைப்பு - தீபாலி நூர், ஷீத்தல் சர்மா (தெலுங்கு)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - கல்கி 
சிறந்த ஒலி அமைப்பு - மன்ஹாஸ் செளத்ரி (இந்தி)
சிறந்த ஒளிப்பதிவு - ஷெனாட் ஜலால் (மலையாளம்)
சிறந்த நடிகை - யாமி கெளதம் (ஆர்ட்டிகிள் 370 - இந்தி)
சிறந்த அறிமுக இயக்குர் - ரந்தீப் ஹூடா (இந்தி)
சிறந்த திரைப்படம் - ஆர்ட்டிகிள் 370 (இந்தி)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

National Film awards 2024: 72வது தேசிய திரைப்பட விருதுகள்.. அமரனுக்கு 3.. மம்முட்டி சிறந்த நடிகர்

news

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

தமிழ்நாடு நாள்.. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் களை கட்டிய மாணவர்களுக்கான போட்டிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்