கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்

Sep 30, 2025,02:00 PM IST

சென்னை:  கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


கரூரில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தார். அப்போது கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், 41  பேர் இடிபாடுகளில் சிக்கி உயிழந்தனர். மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு காரணம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், எம்பிக்கள் குழுவை நேற்று அமைந்தார். அந்த குழு தற்போது கரூரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.




இந்த நிலையில், இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 


கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக. கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும். 


இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.


எனவே, ராகுல்காந்தி அவர்கள், இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உறுதியாக எனது அரசியல் பயணம் தொடரும்... சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்: விஜய்!

news

அக்., 3ம் தேதி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது

news

விஜய்க்கு ஆதரவாக களமிறக்கப்படும் இன்ப்ளூயன்சர்கள்?.. ஆனால் இதெல்லாம் வேலைக்காகாதே!

news

மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

திருவண்ணாமலையில் ஆந்திரப் பெண் பலாத்காரம்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்

news

கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்

news

தங்கம் விலை சவரன் 90,000த்தை நெருங்குகிறது... இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

news

சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை.. அன்புமணிக்கு அன்பில் மகேஷ் பதிலடி

அதிகம் பார்க்கும் செய்திகள்