நவி மும்பை: மும்பையின் முக்கியத் தமிழ் அமைப்புகளில் ஒன்றான நவி மும்பை தமிழ் சங்கம், தனது பொன்விழா ஆண்டை (50வது ஆண்டு) இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.
பொன் விழாக் கொண்டாட்டத்தையொட்டி சிறப்புப் பட்டிமன்றம் பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்றது. பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் தலைமையில் நடந்த இந்தப் பட்டிமன்றம் நகைச்சுவை மன்றமாக மாறி களை கட்டியது. பலரது கருத்துக்களையும் கவர்ந்தது.

இந்த நிலையில் இன்று 2வது நாள் நிகழ்வாக விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற பாடகர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கத்தின் 50 ஆண்டு காலப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக, விஜய் டிவியின் முன்னணிப் பாடகர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேடையில் தங்களின் அபாரக் குரலால் ரசிகர்களைப் பாடகர்கள் கட்டிப்போட்டனர்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடர்கள் ஜீவிதா, பிரசன்னா, அனு, ஜான் ஜெரோம், தவசீலி ஆகியோர் தனித் தனியாகவும் இணைந்தும் பல பாடல்களைப் பாடி ரசிகர்களை சிலிர்க்க வைத்தனர்.

இந்தக் குழுவினர் பழைய மற்றும் புதிய ஹிட் பாடல்களைப் பாடி, அரங்கத்தையே உற்சாகத்தில் ஆழ்த்தினர்.
நவி மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான தமிழ் மக்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். சங்கத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, அங்கு கூடிருந்த இசைப்பிரியர்களுக்கு ஒரு மறக்க முடியாத விருந்தாக அமைந்தது.
செய்தி + புகைப்படம்: ராஜ் முஹம்மது
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}