நவி மும்பை தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா.. கு.ஞானசம்பந்தன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்

Feb 14, 2026,04:09 PM IST
நவி மும்பை: நவி மும்பை தமிழ்ச் சங்கம் தனது 50-ஆவது ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு மாபெரும் நகைச்சுவைப் பட்டிமன்றம் ஒன்றை இன்று (பிப்ரவரி 14) முன்னெடுத்துள்ளது. சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றத்தை பெரும் திரளான தமிழர்கள் திரண்டு வந்து ரசித்து மகிழ்ந்தனர்.

வாசி பஸ் டெப்போ எதிரே அமைந்துள்ள புகழ்பெற்ற விஷ்ணுதாஸ் பாவே அரங்கில் இன்று காலை 10 மணி அளவில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. 1976-இல் தொடங்கப்பட்ட நவி மும்பை தமிழ்ச் சங்கம், தனது நீண்டகாலத் தமிழ்ப் பணியைக் கொண்டாடும் விதமாக இந்தச் சிறப்பு நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது.





பிரபலத் தொலைக்காட்சிப் புகழ் மற்றும் நகைச்சுவை மேதை கலைமாமணி முனைவர் ஜி. ஞானசம்பந்தன் இந்தப் பட்டிமன்றத்திற்கு நடுவராகப் பொறுப்பேற்றுத் தலைமை தாங்கினார். பல்வேறு முன்னணித் தொலைக்காட்சி சேனல்களில் புகழ்பெற்ற பேச்சாளர்கள் இதில் கலந்துகொண்டு நகைச்சுவை மழையில் மக்களை நனைத்தனர்.

நவி மும்பை தமிழ்ச் சங்கம் பல தசாப்தங்களாக மும்பை வாழ் தமிழர்களின் கலாச்சார மையமாகத் திகழ்ந்து வருகிறது. வாசி செக்டர் 9A-வில் உள்ள திருவள்ளுவர் மார்க்கில் அமைந்துள்ள தனது சொந்தக் கட்டிடத்தின் மூலம் கல்வி, கலை மற்றும் சமூகப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது.

பொன்விழா கொண்டாட்டத்தில் நவி மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான தமிழர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று நடந்த பட்டிமன்றமானது,  குடும்பத்தின் வெற்றிக்கு பெரிதும் காரணம் — நிறைவான வருமானமா? முறையான நிர்வாகமா என்ற தலைப்பில் நடைபெற்றது. 

முறையான நிர்வாகம் என்ற தலைப்பில் பேசியவர்கள், வருமானம் குறைவாக இருந்தாலும் சரியான திட்டமிடல், சேமிப்பு, செலவுக் கட்டுப்பாடு இருந்தால் குடும்பம் நிலையாக இருக்கும். எதிர்காலத் தேவைகளுக்கான பாதுகாப்பு ஏற்படும். பல குடும்பங்கள் நடுத்தர வருமானத்திலேயே நல்ல நிர்வாகத்தால் முன்னேறியுள்ளன என்ற வாதத்தை நகைச்சுவையுடன் முன்வைத்து வாதாடி அசத்தினர்.



நிறைவான வருமானம் என்ற தலைப்பில் பேசியவர்கள், அடிப்படை தேவைகள் (வீடு, கல்வி, சுகாதாரம்) பூர்த்தி ஆக வேண்டும். வருமானம் இல்லையெனில் நிர்வாகம் மட்டும் போதாது என்ற  புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து கலக்கினர்.

முறையான நிர்வாகம் தான் நீண்ட கால குடும்ப வெற்றிக்கு முக்கிய காரணம். நிறைவான வருமானம் ஒரு ஆதாரம்; ஆனால் சரியான நிர்வாகம் இல்லையெனில் அதிக வருமானமும் வீணாகலாம். வருமானம் முக்கியம் – ஆனால் நிர்வாகம் மிக முக்கியம் என்ற தீர்ப்பை நடுவர் கு. ஞானசம்பந்தன் வழங்கினார்.

செய்தி + புகைப்படம்:  ராஜ் முஹம்மது
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏப்ரல் 6்ல்.. புதுச்சேரியில்.. காங். தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

news

ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்

news

புதுச்சேரியில் இன்று விஜய் பிரச்சாரம்...3 இடங்களில் மக்களை சந்திக்க திட்டம்

news

சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!

news

Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!

news

Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!

news

Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!

news

பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!

news

ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்

அதிகம் பார்க்கும் செய்திகள்