- கவிஞர் க.முருகேஸ்வரி
சுமார் ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு நான் என் கணவர் என் மகன் என மூன்று பேரும் மகாலிங்கம் கோவில் என்று எங்கள் ஊரில் அழைக்கப்படும் சதுரகிரி மலைக்கு சென்றோம்.... விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது இந்த சதுரகிரி மலை. சதுரகிரி மலையில் முதன்முறையாக ஏறுகிறேன்.
நாங்கள் ஏறும்போதே சிலர் தரிசனம் முடித்து விட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்... அதில் குழந்தைகளும் குதூகலத்துடன் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படியானால் பக்கமாகத் தான் இருக்கும் என்று ஏற ஆரம்பித்தோம்... ஏறினோம் ஏறினோம் ஏறிக்கொண்டே இருக்கிறோம்....
எதிரில் வருபவர்களிடம் எல்லாம் இன்னும் எவ்வளவு தூரம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டுக்கொண்டே ஏறுகிறேன்.... சிலர் பக்கத்தில தான் இருக்குனு பக்குவமாக சொல்லிக் கொண்டு செல்கிறார்கள்.சிறிது தூரம் நடப்பது...சிறிது நேரம் ஓய்வெடுப்பது என்று தொடர்ந்தது பயணம்.. நெல்லிக்காய் வாங்கி சுவைத்துக் கொண்டே சென்றால் தெம்பாக இருக்கும் என்றார்கள்....
கையில் ஒரு கம்பு எடுத்துச் செல்லுங்கள் என்றார்கள்... அவ்வாறும் தொடர்ந்தது பயணம்.... இடையில் கருப்புசாமியைத் தரிசித்து விட்டு வழுக்கும் வழுக்குப்பாறை சங்கிலிப்பாறை என தொடர்ந்தது பயணம்
ஒருவழியாக நெருங்கி விட்டோம் என்று நினைத்து எதிரே வருபவரிடம் கேட்டேன்.இப்ப தான் பாதித் தூரம் வந்திருக்கீங்க... அதுக்குள்ள கோயில் வநதிருச்சானு கேட்குறீங்க என்றார்.. இன்னும் சில மணி நேரம் சென்ற
பிறகு ஓடை... அதில் அனைவரும் குளித்துக் கொண்டு இருந்தனர்.
இப்போது சுந்தர மகாலிங்கம் கோவில் வந்துவிட்டோம்.சாய்ந்த நிலையில் லிங்கம் இருந்தது. தல வரலாறும் அங்கே எழுதப்பட்டு இருந்தது... தரிசனம் முடித்து விட்டு...
பிறகு சந்தன மகாலிங்கம்... படிக்கட்டுகள் ஏறிச் சென்று தரிசித்தோம்... அங்கிருந்த சித்தர் உனக்கு கால் வலிக்கிறதா என்று கேட்டு எனக்கு ஒரு தைலம் கொடுத்தார்.
பக்தர் ஒருவர் கூறினார்... இறைவன் நினைத்தால் தான் இங்கு வரமுடியும் என்றும் அதற்கான ஒரு உண்மைக் கதையையும் கூறினார்..... எங்களுடன் மலை ஏற ஆரம்பித்த ஒரு பாட்டி எங்களுக்கு முன் தரிசனத்தை முடித்து விட்டு அங்கே அன்னதானம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.
அன்னதானத்திற்குத் தேவையான பொருட்களை அந்த ஊர் மக்கள் கீழே இருந்து தலையில் சுமந்து கொண்டு வந்து கொடுக்கிறார்கள். ஒரு பக்தர் வருடா வருடம் வருவதாக என் மகனிடம் கூறினார்.அவன் ஏன் என்று கேட்டான்.கேட்டது கிடைக்கும் என்றார்.
தரிசனம் முடித்து விட்டு இறங்கினோம்....
அப்பனின் அருளால் விருதுநகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் எங்களுடன் நட்பானது.அவர்கள் உதவியுடன் தான் என்னால் இறங்க முடிந்தது.நடந்து தவழ்ந்து....என என்னைக் கைத்தாங்கலாக பிடித்து இறக்கினார்கள்.என் மகனை அந்த அண்ணன் தோளில் சுமந்து கொண்டு இறங்கினார்.... பிரியாவிடை பெற்று திரும்பினோம்...
அந்த வருடம் நான் கால் பதித்த இடம் எல்லாம் வெற்றி... என்னை எனக்கு யார் என்று என் அப்பன் காட்டினார்....
மீண்டும் என்னை எப்போது அழைப்பாய் அப்பா!!!!!
பக்த கோடிகள் அனைவரும் என் அப்பனின் சதுரகிரி தல வரலாற்றைத் தேடிப் படியுங்கள்... அற்புதங்கள் நிறைந்த என் ஐயனைத் தரிசித்து மகிழுங்கள்!!!!
ஓம் நமசிவாய!!!!
{{comments.comment}}