உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)

May 18, 2026,11:52 AM IST

- உமாராணி சங்கரலிங்கம்


ஓம் நமசிவாய.

திருச்சிற்றம்பலம்.


ஜூலை 5,2022.


காலை கண் விழித்தது 6 மணி அளவில். வெளியே வந்து பார்த்தால் லேசான தூறல். ஆஹா அருமையான காட்சி. சுற்றிலும் பனி படர்ந்த மலைகள். Mobile toilet வசதிகளும் இருந்தன.  தண்ணீர் பயங்கர chill என்று இருந்தது. வெந்நீர் வேண்டும் எனக் கேட்டால் ஒரு பாட்டில் 50   ரூபாய் எனத் தருகிறார்கள். வெந்நீர் வாங்கி brush பண்ணி விட்டு tent க்கு வந்தால் எல்லோரும் tentக்குள் இருந்தனர். 


அந்தக் குளிருக்கு காபி,டீ குடித்தால் நன்றாக இருக்கும் எனக் கூற, இருங்கள் வருகிறேன் எனக்கூறி விட்டு வெந்நீர் போட்டுக் கொடுத்த முஸ்லிம் பையனிடம் எங்கள் எட்டு பேருக்கு டீ,பால் போட்டுத் தருகிறாயா எனக் கேட்க , ரூபாய் கொடுத்தால் போட்டுத் தருகிறேன் என்றான். சரி என்று நான் கூறி விட , அப்போது ஆந்திராவில் இருந்து யாத்திரைக்கு வந்த ஒரு பையன், அம்மா குளிருக்கு நல்லா மூடிட்டு வெளியே வாருங்கள், வெளியே ரொம்ப நேரம் இருக்காதீர்கள். இந்தப் பனி நல்லது கிடையாது. எங்கள் கூட வந்த ஒருத்தர் இறந்து விட்டார், tent இல் இப்போது வைத்துள்ளோம் என்றான்.




மழை சிறிது பலமாகப் பெய்ய ஆரம்பித்துவிட்டது. நானும் சரிப்பா, நீங்களும் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறி விட்டு , முஸ்லிம் பையனிடம் டீ யும், பாலும் நல்லா சூடாக வேண்டும் எனக் கூற அவன், நீங்கள் tentக்குப் போங்கள், நான் கொண்டு வருகிறேன் என்றான். Tentக்கு வந்து விட்டு டீ ,பால் விரைவில் வந்து விடும் என்று மட்டும் கூறினேன். 


யாரிடமும் அந்தப் பையன் கூறியதைக் கூறி பயமுறுத்த விரும்பவில்லை. வெளியே போனால் குளிர் தாக்காமல் இருக்க நல்லா sweater போட்டுக் கொள்ளச் சொன்னேன். எல்லோருக்கு டீ யும்,எனக்குப் பாலும் வந்தன. மழை விட்ட பாடில்லை. 9 மணி வாக்கில் சிறிது மழை குறைய 2 பேர் மட்டும் tent இல் இருக்க மற்றவர்கள் லங்காவில் சாப்பிடச் சென்றோம். 


Stuffed roti ,டீ,ரஸ்க் வைத்திருந்தார்கள். நான் ஒரு roti மட்டும் சாப்பிட்டு ORS தண்ணீர் மட்டும் குடித்தேன். திரும்ப வரும் போதும் மழை. குளிர் வேறு. தரை எல்லாம் சேறு. நாங்கள் thermal wear, t-shirt, sweater,jerkin எல்லாம் அணிந்து கொண்டு காதுகளை மூடிக் கொண்டோம். கையில் கட்டியிருந்த கற்பூரத்தை அடிக்கடி முகர்ந்து கொண்டோம்.


எப்பொழுது பயணம் செய்ய அனுமதிப்பார்கள் எனத் தெரியவில்லை. மழை பெய்ததால் யாத்திரிகர்களின் பயணத்தை நிறுத்தி வைத்து விடுகிறார்கள். 1 மணிஅளவில் மழை சிறிது நின்றுவிட,சூரிய பகவான் தரிசனமும் கிடைக்க, இன்னும் 1 மணிநேரத்தில் அனுமதி கொடுப்பார்கள் என்றனர். 2 மணி அளவில் அனைவருக்கும் permission கொடுக்க பயங்கரக் கூட்டம். மக்கள் நமசிவாய மந்திரத்தைக் கூறிக்கொண்டே செல்ல ,அன்று பயணம் செல்ல வேண்டிய மஹாகணேசtop எனுமிடம் சேஷ்நாக் கிலிருந்து சுமார் 5கி.மீ. ,அடுத்து போஸ்பத்ரி எனுமிடம் சுமார் 3 கி.மீ தூரம் அடுத்து பஞ்சதரணி எனுமிடம் சுமார் 12 கி.மீ தூரம். மழை பெய்ததால் பாதை மிகவும் சேராக இருந்தது. 




நாங்கள் 6பேர் குதிரையில் செல்ல தீர்மானித்து குதிரைகாரனிடம் பேசி ஏறி விட்டோம். என் குதிரையின் பெயர் வீரு. குதிரைக்காரனின் பெயர் பிலால் அகமது. என் கணவரின் குதிரையின் பெயர் ராணி. .ஓம் நமசிவாய மந்திரத்தையும் காப்புப் பாடலை பாடினோம். பாதை செங்குத்தாகவும் , சேறாகவும் இருந்தது. குதிரை களை உற்சாகப் படுத்திக் கொண்டே ஏறினோம். மழைத் தூறிக் கொண்டே இருந்தது. போகும் வழியில் பனி படர்ந்து இருந்து.


கொஞ்ச நேரம் (5நிமிடங்கள்) குதிரைக்கும் , எங்களுக்கு ஓய்வு தேவைப்பட்டது. பனிக்கட்டிகளை செந்தில் தம்பி  எடுத்து எங்களுக்குத் தர  நாங்கள் கைகளில் வாங்கி வைத்து சிறிது சாப்பிட்டோம். ஜிலுஜிலு. முதலில் வந்த இடம் மஹாகணேசா top. அந்த இடம் தான் மிக உயரமான இடம். அங்கு கடைகள் இருந்தன. குதிரக்காரர்கள் juice வாங்கிக் குடித்தனர். நாங்கள் எங்களிடம் இருந்த chocolate, dry friuts அவர்களோடு share பண்ணி சாப்பிட்டோம். நான் தண்ணீர் குடிக்க மறக்கவில்லை. பாதை மிகக் கடினமானதாக இருந்தது. மேகங்கள் சூழ்ந்து இருட்டியது போல் ஆனது.


நான் சூரியபகவானை வேண்டியபடியே செல்ல சிறிது நேரத்தில் சூரிய பகவான் இதோ இங்கிருக்கிறேன் என தன் முகத்தைக் காட்ட எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சிறிது நேரம் எங்களைப் பார்த்து விட்டு பின் மேகத்திற்குள் மறைந்து விட்டார். பின் சென்று சேர்ந்த இடம் போஸ்பத்ரி என்ற இடம். நடந்து வருபவர்கள் இங்கேயே தங்கி விடுகின்றனர். இங்கள்ள லங்காவில் சுமார் 200 வகையான சாப்பாடு வைத்துள்ளனர். குதிரையில் செல்பவர்கள் நேராகச் சென்று விடுகின்றனர். சரியான மழை பிடித்து விட்டது. நாங்கள் rain coat எடுத்து மாட்டிக் கொண்டோம். குதிரைக்காரர்கள் எங்களுக்கு உதவினார்கள்.


ஆனால் அவர்கள் மழையில் நனைந்து கொண்டு தலைக்கு மட்டும் ஒரு cover ஐ மாட்டிக் கொண்டு நடந்தனர்.மழை இல்லாமல் இருக்கும் போது ஹெலிகாப்டர் யாத்திரீகர்களை  Pahalgam லிருந்து அல்லது baltal லிருந்து ஏற்றி வந்து விட்டு திரும்பவும் அழைத்து செல்கிறார்கள். பாதை மலையிலிருந்து சிறிது கீழே இறங்கி வருகிறது. ஒருவழியாக மாலை 5 மணி அளவில் பஞ்சதரணி வந்து விட்டோம். பஞ்சதரணி மலைகளால் சூழப்பட்ட அருமையான இடம். குதிரையில் இருந்து இறங்கிசிறிது தூரம் நடந்து சென்று லங்காவில் மற்றவர்கள் சாப்பிட நான் rusk மட்டும் சாப்பிட்டோம். 


கடந்த 2 நாட்களாக phone இல் signal இல்லாததால் நாங்கள் எங்கு இருக்கிறோம் எனத்தெரியவில்லை. மேலும் சேஷ்நாக்கில் மழை பெய்து முதலில் எங்களை அனுமதிக்காமல் இருந்து நம் ஊரில் தொலைக்காட்சி செய்தியில் மிகப் பெரிய வெள்ளம் எனக்கூற பிள்ளைகள் பயந்து விட்டனர். எங்களைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை அவர்களால். நாங்கள் லங்காவில் இருக்கும் போது என் கணவரின் போனில்  signal கிடைக்க பிள்ளைகள் அழுது விட்டனர். நாங்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகக் கூற எங்களுடன் இருந்த எல்லோரது குடும்பத்திற்கும் எங்களது போனைக் குடுத்துப் பேசச் சொன்னோம். 




பஞ்சதரணியில் cot உள்ள tent கள் இருந்தன. நாங்கள் 6பேரும் cot உள்ள ஒரு tent ஐ வாடகைக்கு எடுத்துத் தங்கினோம். மற்றவர்கள் வேறு ஒரு  tent இல் தங்கினர். ஆனால் முருகராஜ், பாஸ்கர் அண்ணா, சுப்புலட்சுமி,மோகன் இவர்கள் நடந்து வந்து போஸ்பத்ரியில் தங்கிவிட்டனர். நாங்கள் எங்கள் 6 பேரும் லங்காவில் இரவு உணவை முடித்து விட்டு, சூடாகக் கொடுத்த பாலைக் குடித்து விட்டு திரும்பவும் tent க்கு வந்து விட்டோம். இங்கும் நிறைய tent கள் இருந்தன,ஆனால் toilet எண்ணிக்கை குறைவாக இருந்தன. 


இரவு நேரத்தில் தூரத்தில் மலை மேலே வரிசையாக விளக்கு வெளிச்சம் இருந்தது. அது தான் சங்கம் எனுமிடம். அடுத்த நாள் அங்கே தான் செல்ல வேண்டும் என்றனர். எல்லோருக்கும் woollen bedsheet,ரஜாய் எல்லாம் கொடுத்தனர். எல்லோரும் நன்றாக உறங்கி விட்டோம். Night திடீரென செந்தில் தம்பி அக்கா,அக்கா என படபடவென எழுப்பி விட்டார். எதற்காக தெரியுமா..?


பயணம் தொடரும்


(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர், மன உளவியலாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்