நாககோட்டி டூ சேஷ்நாக்.. 4 கிலோமிட்டர் சுமந்து சென்ற லீலா.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 6)

May 15, 2026,04:34 PM IST

- உமாராணி சங்கரலிங்கம்


ஓம் நமசிவாய.

திருச்சிற்றம்பலம்.


ஜூலை 4 ஆம் தேதி,2022. திங்கள்கிழமை,


நாகக் கோட்டி என்ற இடத்தில் இருந்து 4கி.மீ தூரத்தில் உள்ள சேஷ்நாக் என்ற இடத்தை அடைய குதிரையில் ஏறினோம். என் குதிரையின் பெயர் லீலா. ஒத்தையடிப் பாதை போன்ற வழி. குதிரை போக ,வர நடைப்பயணம்,

டோலி பயணம். வலது புறம் அழகான ஏரி. Blue colour நீர் தடாகம் போன்று இருந்தது சேஷ்நாக் ஏரி. 


பயணம் கஷ்டமானதாக இருந்தாலும்  அழகை ரசித்துக் கொண்டு சென்றோம். அதிகாலையில் எழுந்தது வேறு தூக்கமாக வந்தது. ஆனால் குதிரையில் அமர்ந்து தூங்க முடியவில்லை. சேஷ்நாக் என்ற இடம் பனி படர்ந்த மலைகளால் சூழப்பட்ட அருமையான இடம். உள்ளே நுழையும் போது பெரிய entrance இருக்கின்றது. குதிரையில் செல்பவர்களைத் தனியாக உள்ளே அனுப்பி விடுகிறார்கள்.




நடந்து வருபவர்களை ஓவ்வொருவராக check பண்ணி அனுப்புகிறார்கள். குதிரையில் இருந்து இறங்கி எங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் சிறு மலையில் ஏறி பெரிய campus இருக்கும் பகுதிக்குச் செல்ல வேண்டும். அன்பு அண்ணாவும் , தேவசேனாவும் அங்கே உள்ளே செல்லாமல் வெளியிலேயே எங்களுக்காகக் காத்திருந்தனர். பின் எல்லோரும் உள்ளே சென்றோம். அங்கே தங்குவதற்கு நூற்றுக்கணக்கான tent கள்  இருந்தன. 


எங்கள் குரூப்பில் நாங்கள் முதலில் வந்ததால் 2 tent வாடகைக்குப் பிடித்தோம். ஒரு நபருக்கு இவ்வளவு பணம். 4 குடும்பத்தினர் ஒன்றிலும், மற்ற 8 பேர்கள் ஒன்றிலும் தங்க ஏற்பாடு. எனக்கு அங்கு சென்றதும் உடம்பு முழுவதும் drain out ஆகியது போன்று இருந்தது.  உடம்பிற்கு ஏதோ செய்ய ஆரம்பித்து விட்டது. செந்தில் தம்பியின் மனைவி சங்கீதாவிற்கு ஒரே வாந்தி,மயக்கம். Medical facilities அவ்வளவு அருமையாக இருந்தது. நிறைய டாக்டர்கள்  வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து அங்கு தங்கி இருந்து உதவி புரிந்தனர். என்னையும் டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். 


B.p , oxygen level எல்லாம் check பண்ண எல்லாம் நார்மல். தண்ணீர் குடிக்காமல் வந்ததால் dehydration ஆகி  drain out ஆகி விட்டது எனக் கூறி ors அடிக்கடி குடிக்குமாறு கூறி ORS packets உம் 2 மாத்திரைகளையும் கொடுத்தனர். குதிரையில் உட்கார்ந்து கொண்டு வந்ததால் தண்ணீர் குடிக்காமல் வந்ததன் விளைவு. Ors குடித்து ,அங்குள்ள லங்காவில் ஏதோ சாப்பிட்டு மாத்திரை போட்டு படுத்து விட்டேன். சிறிது நேரத்தில் நடந்து வந்தவர்களும் சாப்பிட்டு வந்து விட எல்லோரும் 8.30 மணிக்குப் படுத்து விட்டோம். 




Tent இல் உல்லன்,ரஜாய் எல்லாம் கொடுத்திருந்தனர். நடுவில் ஒரு சிறிய விளக்கு எரிந்து கொண்டிருந்தது. 11மணிக்கு வெளியே சத்தமாகக் கேட்டது. இடி,மின்னல் மழை . ரொம்ப இறுக்கமாக இருப்பதை உணர்ந்து நான் முழித்து விட்டேன். இன்னும் சிலரும் எழுந்து விட  எல்லோருக்கும் தூக்கம் போய்விட்டது. ஆனால் உடல் அலுப்பாக இருந்தது.


நடந்து வந்தவர்கள் தங்கள் அனுபவங்களைக் கூற நாங்கள் குதிரையில் வந்த அனுபவங்களைக் கூற வெளியே மழை பலமாகப் பெய்து கொண்டிருக்க அடுத்த நாள் அனுபவங்கள் எப்படி இருக்கும் என எண்ணிக் கொண்டே திரும்பவும்  படுக்கையில் கண்களை மூடிப் படுத்து விட்டோம். 


அருட்பெருஞ்ஜோதி.

திருச்சிற்றம்பலம்.


(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக.,வில் முற்றும் மோதல்... கே.சி. வீரமணி மனமாற்றம்.. ஆளுநரை சந்திக்க இபிஎஸ் திட்டம்

news

முதல்வர் விஜய் நெற்றியை கவனிச்சீங்களா? கருப்பு மைக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்

news

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு.. ரூ.96.11 ஆகக் குறைந்தது

news

தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

வெண் முத்தும் பனித்துளியும்

news

நாககோட்டி டூ சேஷ்நாக்.. 4 கிலோமிட்டர் சுமந்து சென்ற லீலா.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 6)

news

ஏன் எதற்கு எதனால்?

news

டேக் கேர் ..ரதி ....மிஸ் யு ரதி.. அவளின் (ல்) அவன்! (15)

news

IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்