செய்தியாளர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் தயங்குவது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

May 16, 2026,05:23 PM IST

சென்னை: தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்துள்ள சூழலில், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சியின் முக்கிய அமைச்சரான சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கியமான பல விளக்கங்களை அளித்துள்ளார்.


பட்ஜெட்டுக்கு பின்பே ரூ.2,500 உதவித்தொகை :




தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதியான, பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.2,500 உதவித்தொகை திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விரிவான விளக்கம் தந்துள்ளார்.


இதுகுறித்து அவர் பேசுகையில், "பட்ஜெட்டில் (நிதிநிலை அறிக்கை) முறைப்படி அறிவிப்பு வெளியான பிறகே பெண்களுக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். இதற்கான நிதி ஆதாரங்களைச் சரிபார்க்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசின் நிதி நிலையை முழுமையாக ஆய்வு செய்து, அதற்கான ஆதாரங்களை உறுதி செய்த பிறகே இந்த திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார். 


மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் பழைய பதிப்பு (Old version), புதிய பதிப்பு (New version) என்ற எந்த பாகுபாடும் கிடையாது; இது விஜய் அண்ணன் ஆட்சி. இது முழுக்க முழுக்க மக்களுக்கான புதியதொரு தளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


செய்தியாளர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் தயங்குவதில்லை!


முதலமைச்சர் விஜய் செய்தியாளர்களை நேருக்கு நேர் சந்திப்பதில் தயக்கம் காட்டுவதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 


இதுதொடர்பாக அவர் பேசுகையில், "தேவைப்படும் நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திப்பதில் முதலமைச்சர் விஜய்க்கு எந்த விதமான தயக்கமும் இல்லை. தகுந்த நேரத்தில், தேவையான சூழல் வரும் போது அவர் கண்டிப்பாக ஊடகங்களையும், செய்தியாளர்களையும் நேரடியாகச் சந்தித்து அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசுவார்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி வந்தாச்சு.. விதம் விதமாக கொலு வச்சுக் கொண்டாடத் தயாரா மக்களே?

news

பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!

news

Purattasi Special Dish: வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?

news

தமிழகத்தில் தொடரும் மழை: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

news

டெல்லியில் உச்ச கட்ட பதற்றம்: கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நேஹா போரா கைது!

news

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பிரதமருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்

news

மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!

news

மன்னித்து அருளக் கூடியவர் அன்னூர் மன்னீஸ்வரர்!

news

அரட்டை அரங்கம் விசு.. மறக்க முடியாத மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்