அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு.. முதல்வர் வசம் இந்தத் துறைகள்.. மற்றவர்களுக்கு என்ன துறை?

May 16, 2026,05:23 PM IST

சென்னை: தமிழக அமைச்சர்களாக மே 10ம் தேதியன்று பதவியேற்ற அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் குறித்த விபரங்கள் இன்று ஆளுநர் மாளிகை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மே 10ம் தேதியன்று முதல்வர் விஜய் தலைமையிலான, 9 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. இதில் விஜய் உடன் சேர்ந்து மொத்தமாக 10 பேர் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் பதவியேற்று ஒரு வார காலம் ஆனநிலையில் இதுவரை யாருக்கு எந்த இலாக்கா என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. 


இது குறித்து கேள்விகளும் எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு யார் யாருக்கு எந்த துறை என்பது குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விபரம் இதோ...


தமிழக அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை?




1. முதல்வர் ஜோசப் விஜய் - பொது நிர்வாகம், காவல், வனத்துறை, மாவட்ட வருவாய், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கள், மகளிர், இளைஞர், மாற்றுதிறனாளிகள், நகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோக துறை, நகர்ப்புற வளர்ச்சி (முதல்வர் விஜய் வசம் மொத்தம் 16  துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன)


2. ஆனந்த் - கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன், வறுமை ஒழிப்பு திட்டம், நீர்பாசனத்துறை, நீர்பாசன திட்டங்கள்


3. ஆதவ் அர்ஜூனா - பொதுப்பணித்துறை (கட்டுமானம், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்), விளையாட்டுத்துறை


4. அருண்ராஜ்  - சுகாதாரம், மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை


5. செங்கோட்டையன் - நிதித்துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய படிகளுக்கான துறை


6. வெங்கட்ராமன் - உணவு, பொது விநியோகம், வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாட்டுத்துறை


7. நிர்மல்குமார் - மின்சாரம், சட்டம், கோர்ட், சிறை, லஞ்ச ஒழிப்புத்துறை, சட்டசபை, கவர்னர், தேர்தல்கள் மற்றும் பாஸ்போர்ட்


8. ராஜ்மோகன் - பள்ளி கல்வி, தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ் கலாச்சாரம், தகவல் மற்றும் விளம்பரத்துறை, சினிமா தொழில்நுட்பம், செய்தித்தாள் அச்சு, அரசு விளம்பர, அச்சுத்துறை


9. டி.கே.பிரபு - கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை


10. கீர்த்தனா - தொழில்துறை, முதலீட்டு வளர்ச்சி


விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி வந்தாச்சு.. விதம் விதமாக கொலு வச்சுக் கொண்டாடத் தயாரா மக்களே?

news

பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!

news

Purattasi Special Dish: வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?

news

தமிழகத்தில் தொடரும் மழை: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

news

டெல்லியில் உச்ச கட்ட பதற்றம்: கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நேஹா போரா கைது!

news

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பிரதமருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்

news

மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!

news

மன்னித்து அருளக் கூடியவர் அன்னூர் மன்னீஸ்வரர்!

news

அரட்டை அரங்கம் விசு.. மறக்க முடியாத மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்