- ஸ்வர்ணலட்சுமி
"மாங்கனி நகரம்" என்ற பெயர் பெற்றது சேலம் மாநகரம். இங்கு விளையும் சேலம் பெங்களூராவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இப்பதிவில் காணலாம். மாம்பழம் ருசியானது என்பது அனைவரும் அறிந்ததே, மாம்பழங்களை பற்றிய ருசிகரமான தகவல்களும் ஏராளம்.
சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்
கோடைகால பருவ நிலை பழங்களில் முதலில் இருப்பதும்,அனைவரும் விரும்பத்தக்க பழங்களின் ராஜா- "மாம்பழம்".
முக்கனிகளில்( மா பலா வாழை ) முதன்மையாக விளங்குவது மாம்பழம். கோடை காலம்,கத்திரி வெயில் என்று வெயிலின் தாக்கம் அதிகம் ஒரு பக்கம் இருந்தாலும், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சுவைக்க மறுக்காத ஒரு பழம் என்றால் அது மாம்பழமே. சேலம் பெங்களூரா மாம்பழம் என்பது தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மாம்பழ ரகம் ஆகும்.
சேலம் பெங்களூரா மாம்பழம் புளிப்பு தன்மை அறவே இல்லாதது. கற்கண்டு சுவை போன்று தித்திக்கும் மாம்பழம் வகையைச் சேர்ந்தது இந்த சேலம் பெங்களூரா மாம்பழம்.

சாதாரண பெங்களூரா கிளிமூக்கு மாம்பழங்களைப் போலன்றி சேலம் பெங்களூரா மாம்பழங்களில் புளிப்பு தன்மை அறவே இல்லாமல், இவை அளவில் சற்று நீளமாகவும்,அதிக இனிப்பு மற்றும் மென்மையான சதை பற்றுடனும் இருக்கும். இந்த வகை மாம்பழம் நடுத்தர குட்டையாகவும், நுனிப்பகுதியில் கிளிமூக்கு போல கூர்மையாக இருக்கும். இதன் சுவை அடடா... அடடா..என்று நாக்கு சப்பு கொட்டும் அளவிற்கு அதீத சுவை மிக்கதாக இருக்கும்.
சாகுபடி பகுதிகள்:
சேலம்,கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் இந்த சேலம் பெங்களூரா வகை மாம்பழங்கள் சிறப்பாக விளைகின்றன. அனைத்து சீதோஷ்ண நிலையிலும் வளரும் தன்மை இதற்கு உண்டு. பழுத்தவுடன் சதைப்பகுதி வெளிர் மஞ்சள் நிறமாக மாறும்.
1.பெரும்பாலும் இந்த மாம்பழம் அப்படியே பழமாக உண்ணலாம். தோலையும்,விதையையும் நீக்கிய பழச்சதை துண்டு துண்டாக நறுக்கி அப்படியே உண்ணலாம்.
2.பால் சேர்த்து மாம்பழ ஜூஸ் போட்டு பருக நல்ல சுவையாகவும், இதமாகவும் இருக்கும்.
3.மாம்பழ ஐஸ்கிரீம், மாம்பழ பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சேலம் பெங்களூரா மாம்பழம் செய்யும் பொழுது சர்க்கரை குறைவாக சேர்க்கலாம்.
4.மாம்பழக் கூழில் சர்க்கரை சேர்த்து உலர்த்தப்பட்டு சிறு துண்டுகளாக மிட்டாய் போலவும் உண்ணலாம்.
5. மாம்பழத்தையும், தயிரையும் கலந்து செய்யப்படும் மாம்பழ லஸ்ஸி பெரும்பாலான விருந்துகளில் பரிமாறப்படுகிறது.
6. மாம்பழச் சதையில் 15% சர்க்கரை 1%, புரதம் பெருமளவு, உயிர் சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன.
7. ஜூஸ்,ஐஸ்கிரீம், ஜாம் போன்ற பல உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. ஒவ்வொரு மாம்பழத்திலும் தண்ணீர் 81 சதவீதம் , கொழுப்பு 0.4 சதவீதம், புரதம் 0.6 சதவீதம்,நார்ச்சத்து 0.8 சதவீதம், கார்போஹைட்ரேட் 17 சதவீதம் உள்ளன. கிடைக்கும் பொழுது இந்த சேலம் பெங்களூரா மாம்பழத்தை ருசிக்க தவறாதீர்கள்.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
70 வயதிற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி கிடையாது: திமுக தலைமை அதிரடி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
Egypt Tour Diary: பேசும் சிலை!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
{{comments.comment}}