சென்னை; உலகின் மிகத் தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜகவும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறது. அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். இன்று காலை காரைக்காலுக்கு வருகை தந்தார். அங்கு பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், திருநள்ளாறு சனீஸ்வரன், பத்ரகாளி அம்மனை வணங்கி உரையைத் தொடங்குகிறேன் . உலகின் மிகத் தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று தனது உரையை ஆரம்பித்தார். மேலும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அமைக்க வேண்டுமா வேண்டாமா என்று பாஜக தொண்டர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும். அன்றாட தாக்குதலை காங்கிரஸ் வாடிக்கையாக மாற்றி இருந்தது. இது குறித்து வாய் திறக்க மாட்டார்கள்.
பிரதமர் மோடி வந்த பிறகு ,முதன்முறையாக புல்வாமா தாக்குதலுக்கு வான் வழியாக பதிலடி தரப்பட்டது. இதனை தொடர்ந்து ஆபரேஷன் சிந்து வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், பிரதமர் மோடியின் முயற்சியால் மலேசியாவில் தமிழுக்கு சிறுபான்மை மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் புதுசேரியை வளர்ச்சி அடைந்ததாக மாற்ற தொடர்ந்து பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
ஐகோர்டில் வழக்காடு மொழியாக தமிழ்...முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு
தீபாவளி 2026: சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்!
கொள்ளை கொள்ளையாய் நல்ல பயன்கள் நல்கும் தாயே!
கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிரான வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி
Poem by Santhi Sinnathambi: மனசு!
விரைவில் புதிய தலைமை செயலகம் : 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
Teacher's day 2026.. ஆசிரியர் தினம்.. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்!
என் நாட்குறிப்பிலிருந்து.. நிழலாடிய குந்தவை நாச்சியார்.. மறக்க முடியாத தஞ்சை பயணம்!
உனக்கென வசந்தம் உன்மனமே.. எல்லாம் உன்வசமே....!
{{comments.comment}}