சென்னை: நெடுஞ்சாலைத் துறை டெண்டர் மற்றும் சாலைப் பணிகளில் ரூ.3.23 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
இதற்கிடையில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவர் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எ.வ.வேலு பதவி வகித்த போது, கரூரில் சாலைப் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக 'அறப்போர் இயக்கம்' சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், சாலைப் பணிகளை முழுமையாக மேற்கொள்ளாமலேயே, போலி ஆவணங்கள் மூலம் ரூ.3.23 கோடி அரசுப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது கூட்டுச்சதி, கையாடல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
வழக்குப்பதிவைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சைக்காக எ.வ.வேலு சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் 'லுக் அவுட் நோட்டீஸ்' (Look Out Circular) பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து எ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எ.வ.வேலுவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் (Coercive Action) எதுவும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது. மேலும், ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடை உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருப்பினும், இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் தலையிட மறுத்து, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அறிவுறுத்தலின்படி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஜூலை 15) சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் இந்த மோசடி வழக்கு தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள அமைச்சர்
தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி
வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!
லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!
பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பு!
குமாரசாமியின் குலசாமி தமிழின மாக்களின் தகப்பன் சாமி!.. பெருந்தலைவர் காமராஜர்!
தேவகோட்டையில் மாணவர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி கையேடுகள் வழங்கல்
Teamwork Makes the Dream Work.. இணைந்து பணியாற்றினால் இமயம் தொடலாம்!
{{comments.comment}}