- கலைவாணி ராமு
சிவராத்திரி திருவருள்
நாயகனே.....
சிங்கார வேலனின் தந்தையே....
சிவ ஞானத்தின் மூலம்
சிந்தை தெளிய வைப்பவனே..
சடை முடி உடையோனே..
சங்கடங்களை தீர்ப்பவனே....
கால காலனே...
கறை கண்டனே...
சுடுகாட்டுச் சாம்பலை
சொர்க்கமாய் பூசியவனே!

நந்தி வாகனனே...
நர்த்தன நடனம் புரிபவனே....
தன் உடலின் சரிபாதியை உமையாளுக்கு
கொடுத்து அர்த்தநாரீஸ்வரனாய் அருள்பவனே....
தலையில் கங்கை தாங்கியவனே...
பிறை நிலவை சூடிய
பித்தனே... பேயனுக்கும்
முத்தி தரும் பெருமானே!
அண்டங்களை ஆள்பவனே...
சாம்பலின் வாசத்தில் சந்தோஷம் கொள்பவனே...
வில்வ மாலையில் விஸ்வரூப தரிசனம் கொடுப்பவரே.....
பஞ்சாட்சர மந்திரத்தில் பவனி வருபவரே...
கண்ணுக்கும் எட்டாத
ஜோதிப் பிழம்பாய் நின்று
அகிலத்தை ஆட்டும்
ஆதி அந்தம் அற்றவனே!
கோபக் கனல் கொண்ட இவர்
ஆனந்த கூத்தாடும் ராத்திரி - சிவராத்திரி
இந்நாளில் சிவனை வணங்கி
சிவ முக்தி அடைவோம்...
ஓம் நமசிவாய!
சிவாய நமக!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை
Malliga Selvaraj Poem: கோலங்கள்!
கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?
கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?
Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?
{{comments.comment}}