தேடி தேடி அலையும் மனசு நொந்து தொலையும்!

Aug 19, 2026,02:54 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


அரக்க பறக்க 

எந்திரிச்சு

ஆளாளுக்கு வேலை செஞ்சு


பிழைப்பு தேடி ஓடுவது 

நகரம்

ஓடி ஓடி ஒழச்சா தான் 

வாழ்க்கை அங்கே சிகரம்

இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப சிரமம்


தொட்டதெல்லாம் 

காசுதான்

முட்டை கூட 

மாஸ் தான்




சட்டைப் பையில் 

பணம் இருந்தா

கட்டைப் பையும் 

சொகுசு தான்

கடை வீதியிலே 

நடப்பதே ரொம்ப மிடுக்கு தான்


மெஷினைப் போல 

வேலை செஞ்சும்

மிச்சம் மீதி 

ஒன்னும் இல்லே

அந்த கதையை 

நானும் என்ன சொல்ல


வாடகைக்கு பணம் 

இல்லே

வாழ்க்கை ஒன்னும் 

சுகமில்லே


நாய் போல 

ஒழச்சாலும்

நாலு காசு 

மிச்சம் இல்லே


தேதி ஒன்னு 

பொறந்துட்டா

தேவை கொஞ்சம் 

அதிகம்


தேடி தேடி 

அலையும்

மனசு நொந்து 

தொலையும்


ஆடம்பரம் இல்லேன்னாலும் 

அவசியத்தின் தேவை

ஆட்டி வைக்கும்

மாயை


அது கொடுக்கும் 

சோர்வை

அத்தனையும் எதிர்

கொண்டு

வாழ்பவன் தான் 

மேதை

அவனைத் தானே 

அரவணைப்பாள்

அழகு வண்ண 

ராதை


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்

news

அதீத அன்பு.. ஒரு நிமிடக் கதை (30)

news

தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!

news

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு

news

மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

news

பாட்டியானாலும் பிரச்சினை!

news

"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்