கல்லறை தேடுகிறது!
- கவிஞர் வந்தை நளினி
கருவில் உன்னை சுமந்தாரோ
கல்லறையில் உன்னை வைத்தாரோ
மடிந்து நீ விழுந்தாயோ
கொஞ்சி பேசி மகிழ்ந்தாரோ
கண்ணீர் சிந்தி.......
கல்லறையில் உன்னை வைத்தாரோ .
இரத்த துளிகளால் துள்ளினாயோ
நாடி நரம்பு இழந்து துடித்தாயோ
நாவால் பலரை காயங்கள் ஆக்கினாயோ
நலிந்து நீயும் கிடந்தாயோ .
உறவை மதிக்க மறந்தாயோ
உதவி இன்றி ஏங்கினாயோ
தலைக்கனமாய் வாழ்ந்தாயோ
தளர்ந்து மண்ணில் சாய்ந்தாயோ .
பச்சை மரமாய் இருந்தாயோ
பட்டு நீயும் போனாயோ
வளர்ந்த செடியாய் உயர்ந்தாயோ
வாடி நீயும் சாய்ந்தாயோ .
மன்னிக்க மறந்தாயோ
மனிதப் பண்பை மறந்தாயோ
ஆறடி ஆழத்திலே
ஆறறிவும் அழிந்து போனதோ
கல்லறை வரை மலர் தூவி
உன்னை அழைத்துச் செல்வார்
புதைத்தவுடன் விலகிச் செல்வார் .
பஞ்சு மெத்தையில் உறங்கினாலும்
குடிசை வீடுகளில் உறங்கினாலும்
கடைசியில் உறங்குவது மண்ணில் தான் .
கல்லறைக்குள் ஒரு நாள் வந்து விடுவாய்
நீ வாழ்ந்த வாழ்க்கையை கடவுள் பார்த்து விடுவார் .