கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

Su.tha Arivalagan
Sep 05, 2026,10:30 AM IST

- கு. கவிதா


பள்ளி எனும் பூஞ்சோலையில், 

மாணாக்கர் என்னும் வண்டுகளை, 

கல்வி என்னும் நறுந்தேனை,

சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே. 


அன்பையும் பண்பையும் இசைந்து, 

கற்போர்தம் ஊனிலும் உயிரிலும் கலந்து, 

இன்முகத்துடன் இன்னல்கள் நீக்கி, 

இலக்கை அடையச் செய்யும் படைப்பாற்றல் நாமே. 


சிந்தனை வளத்தை ஏற்றமாக்கி, 

சிறப்பாக வாழ்வதனை செம்மையாக்கி , 

இத்தரணியில் தனது உழைப்பை, 

இதயப்பூர்வமாக உதிர்க்கும் ஊற்றுகள் நாமே. 




காலம் பல செல்லலாம், 

ஞாலத்தில் பகல் இரவு மாறலாம், 

ஆனால், 

என்றும் மாறாமல் கற்போருக்கு ஒளி காட்டி, 

காவியம் படைக்கும் வழிகாட்டிகள் நாமே. 


உழைப்பும் உன்னதமும் நமக்கே! 

உயர்வும்  ஊக்கமும்        

மாணாக்கருக்கே! 


அனைத்து ஆசிரியர்களும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். 


(கு. கவிதா, பட்டதாரி ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம்)