இதயத்துடிப்பும் மனநிறைவும்

Su.tha Arivalagan
Apr 29, 2026,04:51 PM IST

- கவிதா உடையப்பன், சேலம்


கேட்காமல் கேட்பது இதயத்துடிப்பு 

பார்க்காமல் பார்ப்பது ஜீவன்

 

நுகராமல் நுகர்வது வேர்வை 

தொடாமல் தொடுவது காற்று

 

சுவைக்காமல் சுவைப்பது ஆற்றல்

சுமக்காமல் சுமப்பது எண்ணம்

 

சொல்லாமல் சொல்வது செயல்பாடு

செய்யாமல் செய்வது திறமை

 

கொடுக்காமல் கொடுப்பது அன்பு

வாங்காமல் வாங்குவது பரிசு


 


வழங்காமல் வழங்குவது இயற்கை

பெறாமல் பெறுவது நிம்மதி


காட்டாமல் காட்டுவது இயல்பு

கடக்காமல் கடப்பது கடமை 

 

படிக்காமல் படிப்பது வாழ்க்கை

எழுதாமல் எழுதுவது தலையெழுத்து 

 

அறியாமல் அறிவது பழக்கம்

உயராமல் உயர்வது அகவை 

 

வராமல் வருவது பசி

தராமல் தருவது மனநிறைவு


நடக்காமல் நடப்பது காலம்.


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன், தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)