காவியக் காதல்!
-கவிஞர் க.முருகேஸ்வரி
அறியா வயதில்
புரியா மனதில்
புதிதாய் வந்த என் உறவே..
உறவாய் நினைத்தே
உளத்தால் ரசித்தேன்
காதலாய் மாறக்
காரணம் எதுவே....
பார்க்கும் போதே
பரவசம் கண்டேன்
பார்வையாலே
உன் காதலை உண்டேன்
நம்பினேன் அதனால்
தினம் வெம்பினேன்....
விவரம் புரியா வயசில்
விளங்கவும் இல்லை
விளக்கவும் இல்லை....
காதலும் இல்லை
மோதலும் இல்லை
காலத்தின் போக்கில்
கரைந்துருகிப் போனதே...
உன்னுடனான எந்தன் காதல்
வெறும் கனவாய் மட்டும் என ஆனதே....
கவலைப்பட ஒன்றுமில்லை ...
கைகூடாவிட்டாலும்
இது நம் காவியக் காதலே!!!!!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).