விடியலின் காதல்

Feb 07, 2026,10:21 AM IST

- கவிதா அறிவழகன்

     

விடியல் என் முதல் காதல்,

விடியலின் சுவாசம் என் மூச்சு,

தூரத்து கோயில் மணி,

தூக்கத்தில் இருந்த என்னை,

துயிலெழுப்பும் ஒரு தாலாட்டு.


பனித்துளிகள் நனைந்த புற்களின் மீது,

பதிய நடந்த பாதம்,

நனைவதில் ஒரு பரவசம்.




இருளை மெல்ல விழுங்கிய

அழகிய விடியல்,

கதிரவனின் மென்மையான சிரிப்பு,

இதயத்தினுள் விதைத்த 

புதிய ஒரு நம்பிக்கை.


குருவிகளின் கீச்சொலியில் 

ஒரு ராகம்,

ஆன்மாவின் பன்முக ராகம்,

இயற்கை வாசிக்கும்,

மௌன கீதங்கள்.


விடியலின்  சிவப்பு  துளியில் ஜனித்த ரோஜா,

என்னை அழைத்தது,

அதன் ஸ்பரிசம்

மெய் மலரச் செய்தது.


தென்றலோ என்னை தழுவி செல்ல செல்ல,

நேற்றைய கவலைகளை

மறக்கடித்தது.


அன்பான விடியலே,

இன்றைய பொழுதினை,

அழகிய கவிதையாக

ஆற்றியது நீ தானோ...


(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

news

எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்