சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று (24.06.2026) மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னையின் முக்கியப் பிரச்சினைகளான மின்தடை விவகாரம், பள்ளி நிர்வாக நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.
"மக்கள் வருத்தப்படுகின்றனர்" - மேயர் பிரியா சாடல்

மாமன்றக் கூட்டத்தில் சென்னையில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது பேசிய மேயர் பிரியா, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் மின்வெட்டுகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், "தற்போது நிலவும் இந்தச் சூழ்நிலையால், தவெக.,வுக்கு வாக்களித்த மக்கள் 'ஏன் வாக்களித்தோம்' என்று வருத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார். மேலும், ரீல்ஸ் பார்த்து ரியல் ஆட்சியை இழந்து விட்டதாக மக்கள் வருத்தப்படுவதாகவும் மேயர் பிரியா தெரிவித்தார். இதற்கு தவெக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
கவுன்சிலர்கள் இடையே மோதல்:
கூட்டத்தின் ஒரு பகுதியாக, 182-வது வார்டு அதிமுக கவுன்சிலரான கே.பி.கே. சதீஷ் அவையில் பேசத் தொடங்கினார். அப்போது அவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலின் உச்சக்கட்டமாக, சதீஷ் பேசிக் கொண்டிருந்த போது அவர் மீது திமுக கவுன்சிலர் ஒருவர் காகிதங்களை (பேப்பர்) சுருட்டி வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவையில் பெரும் சலசலப்பும், பதற்றமான சூழலும் உருவானது. இருதரப்பு கவுன்சிலர்களும் மாறி மாறி முழக்கமிட்டதால் மாமன்ற வளாகமே சிறிது நேரம் போர்க்களமாக காட்சியளித்தது.
மாநகராட்சி பள்ளிகளில் இனிப்பு வழங்க தடை:
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்துப் பேசிய மேயர் பிரியா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, மக்கள் பிரதிநிதிகள் அல்லாத வெளிநபர்கள் யாரும் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்குள் சென்று மாணவர்களுக்கு இனிப்புகள் அல்லது எந்தவொரு பொருளையும் வழங்கக் கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பள்ளி தலைமை ஆசிரியரின் முறையான அனுமதியின்றி மாணவர்களுக்கு இனிப்பு உள்ளிட்ட எந்தவொரு பொருளையோ, உணவுப் பண்டங்களையோ வழங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளாக (கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள்) இருந்தாலும் கூட, மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்ற பிறகே மாணவர்களைச் சந்திக்கவோ அல்லது உதவிகளை வழங்கவோ வேண்டும் என்று மேயர் பிரியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}