கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

Aug 08, 2026,04:53 PM IST

புதுடெல்லி: கரூர் மாவட்டத்தில் அரசுப் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை, வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஆனந்தஜோதி மற்றும் பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களையும் இதனுடன் சேர்த்து விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.


வழக்கின் பின்னணி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரில் 33 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் அரசு வேலை வழங்கப்பட்டது. இதற்கான பணி நியமன ஆணைகள் சமீபத்தில் முதல்வர் விஜய்யின் கரூர் பயமணத்தின் போது நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு கோர்ட்டில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தமிழக அரசு வழங்கிய பணி நியமன ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டின் இந்த பணி நியமன ரத்து உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நகர்வு




இவ்வழக்கில் அரசுத் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தவிர, பணி இழப்பால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஆனந்தஜோதி மற்றும் பிரபாகரன் ஆகிய இருவர் சார்பில் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் அனைத்தையும் தனித்தனியாகப் பார்க்காமல், ஒரே வழக்காக இணைத்து வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முக்கிய அம்சம்: பாதிக்கப்பட்ட தனிநபர்களின் மனுக்களையும் அரசுத் தரப்பு மனுவுடன் சேர்த்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது, பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஒரு முக்கிய சட்டப் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.


நிலவும் எதிர்பார்ப்புகள்

அரசுப் பணி ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலம் இந்த உச்ச நீதிமன்ற விசாரணையை நம்பியே உள்ளது. அரசுத் தரப்பின் நியாயங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மனுதாரர்களின் கோரிக்கைகள் ஆகியவற்றை ஆராய்ந்து உச்ச நீதிமன்றம் அளிக்கவுள்ள உத்தரவு, இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விசாரணை, அரசு நிர்வாக வட்டாரத்திலும் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்