கனவு

Feb 05, 2026,04:54 PM IST
- க.யாஸ்மின் சிராஜூதீன்

தூக்கத்தில் காண்பது கனவு 
நம்மை தூங்க விடாமல் செய்வதும் கனவு..

நிறைவேறாத கனவு பகல்கனவு 
நிறைவேறும் கனவு அதிகாலைக் கனவு....
முன்னோர் சொல்லி வைத்த கனவு...

நம்மை தூங்க விடாமல் செய்வதுதான் கனவு...
அப்துல் கலாம் ஐயா அவர்கள் 
சொன்ன கனவு....

திட்டம் தீட்டினால் கனவு  
வென்ற பின்னே நிஜமாகும்  கனவு ....



வீடு.. வீடில்லாதவனின் கனவு  
மாளிகை ஆடம்பரக்  கனவு...

விளைச்சல் விவசாயியின் கனவு....
உணவு  பசியின்  கனவு ....

வருமானம் வேலை தேடுபவனின் கனவு....
ஓய்வு செல்வந்தனின் கனவு....

கல்வி மாணவனின் கனவு 
வேலை இளைஞர்களின் கனவு...

மாணவனின் வளர்ச்சி ஆசிரியரின் கனவு...
ஆசிரியரைப்போல் .. ஆசிரியர் ஆகவேண்டும் என்பது 
மாணவனின்  கனவு........

பிள்ளைகளின் இன்பவாழ்வு 
பெற்றோர்களின்  கனவு...
பெற்றோர் மனம் வருந்தாமல் 
இருக்க வேண்டும் என்பது பிள்ளைகளின் கனவு....

எதிர்காலம் பற்றியது எதிர்பார்க்கும் கனவு.....
முடிந்து விட்டதெல்லாம் இறந்தகாலக் 
கனவு.....

நிகழ்ந்து கொண்டிருப்பவை எல்லாம் 
நிகழ்காலக் கனவு...
எதிர்பார்க்காதவை எல்லாம் காலத்தின் கனவு.....

எல்லா உயிர்களும் காணும் கனவு...
மனிதன் மட்டும் வாழ்நாள் முழுவதும் 
காணுவான் கனவு.....

சிறந்த கனவுகள் சிகரம் தொடும் கனவு....
தூக்கத்தில் கனவுகள் கானல்நீர் கனவு.....

தூக்கத்தில் கனவு மறந்து விடும் கனவு..
வாழ்க்கையில்  கனவு  ஊக்கம் தரும் கனவு  ...

மனிதர்களுக்குள்  மாறலாம்  கனவு....
மனதில் ஊசலாடாமல் இருக்காது கனவு....
 
வாழ்க்கையில் சிறந்த பொக்கிஷம் 
நம்மை இயங்க வைக்கும் கனவு...
வெறும் கனவு மட்டுமே காணாமல் 
செயலாக்கு அதுவே வாழ்க்கை கனவு.....

கனவு கனவாகாமல் இருக்க 
இலக்குடனே பயணிப்போம்...
அலைகடலின் அலைபோல 
வாழ்க்கை கடலின் அலைகலாம் கனவு....

(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்