கீ போர்டு குருவியின் கீச் கீச்!

Su.tha Arivalagan
Nov 12, 2025,04:34 PM IST

- பா. அகிலாண்டேஸ்வரி


கலகலவென குழந்தையின் சிரிப்பு ஓசை அழகு; 

சலசலவென ஓடும் நதியின் ஓசை அழகு; 

கண்ணாடி வளையல்களின் ஓசை அழகு ;

ஜல் ஜல் என சலங்கையின் ஓசை அழகு ;

காற்றில் ஆடும் மரம் செடிகளின் ஓசை அழகு ;

பறவைகள் கிரீச்சிடும் ஓசை அழகு ;

பசியின் போது சமையலில் தாளிக்கும் ஓசை அழகு;

நீர் வீழ்ச்சியின் ஓசை அழகு ;




மழையின் ஓசை அழகு ;

அதற்கு முன்னே வரும் இடியின் ஓசை அழகோ அழகு. 

அலைகளின் ஓசை அழகு ;

அரிதாய் போன சில்லறை காசுகளின் ஓசை அழகு; 

வண்டுகள் ரீங்காரம் ஓசை அழகு ;

புத்தகம் திருப்பும் ஓசை அழகோ அழகு. 

ஆனால் இந்த டிஜிட்டல் உலகில்

இவை அனைத்தும் மாயமாய் மறைந்து போனதெங்கே! 

எங்கெங்கும் கேட்கும் ஒரே ஓசை 

கீ  கீ என்ற டிஜிட்டல் கீ போர்டு குருவியின் ஓசைதானே!


(பா. அகிலாண்டேஸ்வரி, இல்லத்தரசி, புதுமுகக் கவிஞர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்)