- ம. அங்கயற்கண்ணி, அரூர்
என் மகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி தந்த புத்தகம் ஒற்றை சிறகு ஓவியா. எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் மேதகு படைப்பு. குழந்தை இலக்கியம் தானே என்று அதை நான் படிக்கவே இல்லை, என் மகள் படித்து விட்டு குதுகலித்தாள்.
நான் பெரியதாக கண்டுகொள்ளாமல் இருந்தேன். விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற செய்தியும் அது ஒற்றை சிறகு ஓவியா நூலுக்கு என்று சில மாதங்களுக்கு முன்பு அறிந்து கொண்டேன். அதைக் கேட்டபோது ஒரு பக்கம் அளவில்லா ஆனந்தம், மறு பாக்கமோ ஆதங்கம், இரண்டு வருடமாக என்னை சுற்றி வந்த புத்தகத்தை இன்னும் நான் வாசிக்கவில்லையே என்றுதான்,
வீட்டிற்கு வந்ததும் என் குட்டி நூலகத்தில் இருந்து அதை தேடி கண்டெடுத்தேன், ஒளிரும் கண்களுடன் வாசிக்க தொடங்கினேன்.

ஐந்து நண்பர்கள், வாட்ச் மேன் தாத்தா, ஆண்டு விழா என சாதாரணமாய் ஆரம்பிக்கும் கதைதான், அடுத்து அடுத்து என நம்மை படிக்க தூண்டிக்கொண்டே இருக்கும் எழுத்து நடை, கதை சுவாரசியம், அதில் இயற்கையின் மீதான அக்கறை, மண்புழுக்கள், ரசாயன உர பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகள், தண்ணீர் மாசுப்பாடு, விவசாயம் அழியும் கண்ணீர் கதை என குழந்தைகள் வழி பெரியோருக்கும் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக நூல்.
எளிய நடை, விருவிறுப்பான கதை, கற்பனை விரிவு, என குழந்தைகள் விரும்பும் அத்தனை சிறப்புகளையும் உள்ளடக்கிய ஆகசிறந்த படைப்பு, நீங்களும் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ஒற்றை சிறகு ஓவியா என்ற நூல், 2025ம் ஆண்டுக்கான சாகித் அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூலாகும். குழந்தைகளுக்கான நூல் என்றாலும் கூட பெரியவர்களும் கற்றுக் கொள்ளக் கூடிய பல விஷயங்கள் இதில் உள்ளன.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}