சென்னை: "திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இல்லை என்பதை திமுக தலைமையே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது" என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். விசிக விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கூட்டணிக் குழப்பங்கள் குறித்து மிக முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். சமீப காலமாக தமிழக அரசியலில் விசிக, திமுக மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆகிய கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்து வந்த நிலையில், திருமாவளவனின் இந்த உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தான் உறவை முறித்துக் கொண்டது!
விழாவில் பேசிய தொல். திருமாவளவன், திமுகவுடனான கூட்டணி முறிவு குறித்துப் பின்வருமாறு விளக்கமளித்தார், "திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்று திமுக தலைமையே அறிவித்துவிட்டது. இதுவரை நான் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை; அதேபோல், நாங்கள் தவெக கூட்டணியில் இருக்கிறோம் என்றும் எங்கும் சொல்லவில்லை. திமுகவின் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஒருவரை அழைத்துத் தங்கள் கட்சியில் இணைத்த போதே, 'விசிகவுடன் எங்களுக்கு இனி உறவில்லை' என்பதை திமுக தலைமை மறைமுகமாகச் சொல்லிவிட்டது. எனவே, விசிகவுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பைச் செய்தது அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்."
ஆட்சி அதிகாரத்தில் பங்கு: திருமாவளவன் நிலைப்பாடு

தொடர்ந்து பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறுவது மற்றும் எதிர்காலக் கூட்டணி வியூகங்கள் குறித்தும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்:
அமைச்சரவையில் பங்கு: "நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்க விரும்புகிறோம். கடந்த 1-ஆம் தேதி நடந்த கூட்டத்திலும் இதுகுறித்துப் பங்கேற்றுப் பேசினோம்.
முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை: கூட்டணி மற்றும் ஆட்சிப் பகிர்வு தொடர்பாக இன்னும் அங்கு இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
எதிர்காலக் கூட்டணி: ஒருவேளை ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரக்கூடிய வகையிலான புதிய கூட்டணி அமைந்தால், நிச்சயமாக விசிக அதில் இடம்பெறும்."
விசிக குறித்து திமுக முன் வைத்து வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்த திருமாவளவன், தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்தால் அதில் விசிக கண்டிப்பாக அங்கம் வகிக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவிக்காக, திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சரியான முடிவு
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
விடுதலை!
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
நானாக என்னிடம் எதுவுமில்லை இப்போது!
புலரும் காலைப்பொழுதினிலே
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
{{comments.comment}}