மெல்லிய முல்லை மலர் சூடிய அமர் நீதி நாயனார் .. 63 நாயன்மார்கள் வரலாறு!

Su.tha Arivalagan
Mar 26, 2026,03:50 PM IST

- கலைவாணி கோபால்


"அல்லி மென் முல்லை யந்தார் அமர் நீதிக் அடியேன் " 


மெல்லிய இதழ்களோடு கூடிய மெல்லிய முல்லை மலர் மாலையை சூடிய அமர் நீதி, என்பது சுந்தரர் பெருமானின் புகழ் ழாரத்திற்கு சொந்தகாரர் அமர் நீதி நாயனார்.


சோழ நாட்டில் உள்ள பழையாறு என்னும் ஊரில் மிகப்பெரும் செல்வந்தராக பிறந்தவர் அமர் நீதியார்.


அதன் அருகில் உள்ள நல்லூரில் சிவன் ஆலயத்தில் "கல்யாண சுந்தரேஸ்வரர்"  திருக்கோயில்.,இது மிகப்பெரும் புகழ்பெற்ற சிவஸ்தலம் ஆகும்.


முன்னொரு காலத்தில், யானையும் சிலந்தியும் போட்டி போட்டு சிவனை வணங்கி அந்த யானை மறுபிறப்பில் கோச்செங்கணான் என்னும், நாயன்மாராக பிறந்து அந்த நாயனார் சோழ அரசராக இருந்த போது கட்டப்பட்ட ஆலயம்.


அது மட்டுமல்லாமல், திருநாவுக்கரசர் பெருமான் தீட்சை பெற்ற இடமும் நல்லூர். கல்யாண சுந்தரர் பெருமாள் இடத்தில்தான். அந்த அற்புதத் தலத்தில் முன்னாள் ,மடம் கட்டி அங்கு, சிவனடியார்களுக்கு சேவை செய்து வந்தவர் அமர் நீதியார்.




பெரும் வணிகரான அமர்நீதியார், அடிக்கடி வியாபார விஷயமாக வெளியே சென்றாலும், வந்தவுடன் மடத்தில் இருந்து அடியார்களுக்கு தொண்டும் செய்து வந்தார் வரும் சிவனடியார்களுக்கு திருநீரு அணியவும், திருமண் பூசவும், அமுது உண்ணவும், அவர்களுக்கு.. புது உடை அளித்து அவர்களுக்கு பொருள் உதவி செய்வதும் என சிவனடியாருக்கு செய்வதை சிவனுக்கே செய்யும் தொண்டாக கருதி கவனத்துடனும் பக்தியுடனும் செய்து வந்தார். 


மடத்திற்கு வரும் சிவனடியாருக்கு பாத பூஜை செய்து, அமுதலளித்து புதுக்கோவணம் கொடுத்து, அவர்களிடம் ஆசி வாங்குவதும்,, அவரின் பிறவிக்கடமை. என ஒரு நிறைவு கொண்டு 'சிவ பணியை செய்து வந்தவர்.


ஆனி மாதம் பூர நட்சத்திரம். நாளில் வியாபார விஷயங்கள் எல்லாம் முடித்த நிலையில் பழைய ஆற்றில் இருந்து தன் மடத்தை பார்வையிட நல்லூர் வந்திருந்தார் அமர் நீதியார். வரும் அடியார்களை உபசரித்துக் கொண்டிருந்தார். 


அப்போது, அங்கு வந்து அடியவர்.. ஒருவர் ,சிவந்த மேனி, ஒல்லியான உருவமும் ,நெற்றியில் திருநீறு ,கையில் கம்பும் ,அதன் உச்சியில் இரு துணிகளும், கட்டப்பட்டு கழுத்தில் ருத்ராட்சத்துடன், கண்களில் கருணையோடும், உதட்டில் புன்னகையோடும், சாந்த சந்தசொரூபகமாக ஒரு அடியார் காட்சியளித்தார்.


அவரை, இன்முகத்துடன் வரவேற்றார். அமர்நீதியார்,.. இடுப்பு உடையான கோவணம் மட்டுமே அணிந்திருந்தார் அந்த அடியவர். 


அக்காலத்தில் தீவிர சிவனடியார்கள்.. மூன்று உடைகளை மட்டுமே சிறப்பாக கருதி அணிவார்கள்.


1.காஷாயம்

2.கௌதாம்பீனம்

3.கோவணம்


இந்த மூன்று வகையான ஒற்றை உடை மட்டுமே அணிவார்கள். 


இதில் ,கௌதாம் பீணி என்னும் கோளம் பூண்டு, கையில்.. திருவோடும் இருக்காது. இத்தகைய சிவ அடியார் வேடம் பூண்டு வந்தவர்.நம் சிவபெருமான்.


அந்தச் சிவனடியார் , அமர்நீதி இடம், நான்,' குளிக்கச் செல்கிறேன். எனக்கு மாற்று உடை , இந்த கெளதாம்பீணி மட்டுமே, உண்டு. மழை வரும் போலிருக்கிறது, நீர்' இதை கொஞ்சம் பாதுகாக்க முடியுமா? நான் குளித்துவிட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன். என்று சொல்லி அங்குள்ள கோயிலின் அருகில் உள்ள ஏழுகடல் தீர்த்தம் என ஒரு குளம் உண்டு அங்கு ,..சிவனடியார்கள் அனைவரும் கலைப்பு நீங்க குளிக்கச் செல்வார்கள் . சொல்லி, அந்த கோவணத்தை அமர் நீதியார் இடம் கொடுத்து விட்டு அந்த குளக்கரை நோக்கி சென்றார்  .


அந்த அடியார் சொன்னது போலவே, மழையும் வந்துவிட்டது. அவர் மழையில் நனைந்து வந்து, மாற்று கோவணத்தை அமர் நீதியாரிடம் கேட்டார்.


அமர்நீதி யாரும் இதோ, கொண்டு வருகிறேன் .என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று பார்த்தபோது, கோவணம் காணாமல் போய் இருந்தது.அமர்நீதியாருக்கு என்ன செய்வது என தெரியாமல் காணாமல் போன கோவணத்தை பற்றி அடியாரிடம் ... தலை குனிந்தவாறு தெரிவித்தார்.


இதைக் கேட்ட அடியார், மிகுத்த சினம் கொண்டார். சிவனடியார் சொத்துக்களை திருடித்தான் சம்பாதிக்கிறாயா, உன்னை நம்பி கொடுத்தால் இப்படி திருடுவாயா! என சீறினார். 


அடியார், சொன்ன அவதூறு வார்த்தைகளை கேட்டு அமர்நீதியார்,.. மிகவும் தவியாய் தவித்து நின்றார். 


அந்தக் கோணத்திற்கு, ஈடாக ,..எதை வேணாலும் தருகிறேன் .என்று கூறியபோதும் அந்த அடியவர் சினம் தனியவில்லை. 


ஊர் மக்களும் சமாதானப்படுத்தினர் ஆனாலும் ..அடியவர் சீற்றம் குறையவில்லை. இறுதியாக தான் வாணிபம் செய்கின்ற துலாபாரத்தில் அவரின், கோவணத்திற்கு ஈடாக எதை வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொல்லி சமாதானப்படுத்தினார்.


சரி ,..என்று ஒப்புக்கொண்ட அந்த அடியவர், கம்பின் நுனியில் இருந்த பழைய கோவணத்தைக் கழற்றி துலாபாரத்தில் ஒரு தராசில் ஒரு தட்டில் வைத்தார். மறுதட்டில், முதலில் அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டது. புதிய ஆடைகளும் வைக்கப்பட்டது. ஆனாலும், தராசு முள்  நேராக வரவில்லை. இதை இறைவனின் திருவிளையாடல் என்று நம்பிய அமர்நீதி யார். அனைத்து சொத்துக்களையும்,  பொருட்களையும், நவமணிகளையும், தராசில் வைத்தார். அப்போதும் தராசின் முள்நேராக வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அனைத்தும் சிவன் செயல் என, தெரிந்தது அமர் நீதியாருக்கு, சிவனடியார், சாதாரண ஆசாமி இல்லை என்பதையும் புரிந்து கொண்டார். இறுதியாக, குடும்பத்துடன் தராசு தட்டில் அமரருவதாக முடிவு செய்தார்... பஞ்சாட்சரம் சொல்லி , தட்டில் ஏறும் முன், நெஞ்சில் கைகூப்பி கண்ணீரோடு,.. 'சிவனே ,இதுவரை நான் செய்த அடியவர் அன்பினில், சிறிதும் தவறாக இருந்தது உண்மையானால், துலாம் நேர் நிற்க"என்று பஞ்சாட்சரம் சொல்லி தராசு தட்டில் குடும்பத்துடன் ஏறினார். 


அதுவரை கோவணத்திற்கு ஈடாகாத, அமர் நீதியின் சொத்துக்கள், இவர் குடும்பத்துடன் அமர்ந்ததும் தராசு முள் நேராக நின்றது.


தான் கோவணத்தை திருடவில்லை.ஒரு சிவனடியார் இடமும் அன்பினில் தவறவில்லை.என்பதை ,சிவனே தராசு முலம்சொல்லிவிட்டார் என, ஆனந்த கண்ணீரில் இருந்தார்.நாங்கள் இந்த நாள் முதல் உங்கள் அடிமை, என்று சொல்லி அந்த,.. அடியார்  முன் நின்றார். 


உடனே, அந்த அடியவர் நல்லூர் சிவனை நோக்கி, அதாவது ,..கருவறை நோக்கி ஓடிச் சென்றார். அந்த நேரம் ஆலயமணி முழங்கிற்று, பேரொளி சூழ்ந்தது. அந்த வெளிச்சத்தின் நடுவில் இன்னிசை முழங்க பார்வதி தேவியுடன் சிவபெருமான் அவருக்கு காட்சியளித்தார். அமர்நீதி யார் குடும்பத்துடன் திகைத்து நின்றார். 


மெல்லச் சிரித்தார் சிவபெருமான், அமர் நீதி இடம் "இதுவரை நான் செய்த அடியவர் அன்பினில், சிறிதும் தவறாக இருந்தது. உண்மையானால், துலாம் நேர் நிற்க'என்ற வார்த்தையை நீ .. முதலிலே சொல்லியிருக்கலாம். ஆனால், நீ உன் பொன்னும் ,மணியும் ஈடாகும் என்ற நம்பிக்கையில் பொருளில் நம்பிக்கை வைத்தாய். இதற்காகவே இந்த சோதனை. 


கடைசியாக, அனைத்தையும் இழந்து, நீ என்னிடமே சரண் புகுந்தாய், உன் அன்பு உலகில் மிகச் சிறந்தது. 


சிவன் முன்பு வணங்கி,.. நன்றிக்கண்ணீர் பெருக நின்று, கொண்டிருந்தார் அமர்நீதி யார். இனி சிவனடியார் தொண்டு மட்டுமே செய்வேன். வியாபார ம்செய்கிலேன் என அமர்நீதியார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,


" அமர் நீதியே'நீர் தராசில் நின்று அதை சமமாக்கியதால் எமக்குச் சொந்தம். உம்மை நான் எப்படி விட முடியும். குடும்பத்தோடு தராசில் ஏறும்". அப்படியே தராசில் குடும்பத்துடன் ஏறினார். உடனே தராசு புஷ்பக விமானமாக மாறி கைலாயம் சென்றது. அங்கு "சிவனை முகம் முகமாக "தரிசிக்க தொடங்கினார் அமர் நீதியார்.


இன்றும், அந்த நல்லூர் கோவிலில் ஆனி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று அமர் நீதியாருக்கு குரு பூஜை செய்யப்பட்டு,.. துலாபாரம் நடைபெறுகிறது.