Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Su.tha Arivalagan
Dec 10, 2025,11:29 AM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி


விளையாடவும் ஆன்மீகத்திற்கும் பயன்படும் நண்டினைப் பற்றி பார்ப்போம்.


வீட்டில் நண்டு வருவது பொதுவாக நல்ல சகுணமாகவே கருதப்படுகிறது; இது செல்வ வரவு, தொழில் வளர்ச்சி, குடும்பத்தில் சுபிட்சம், மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. 


குறிப்பாக நண்டு வழிபட்ட கற்கடேஸ்வரர் கோவில் போன்ற இடங்களில், நண்டுகள் தெய்வ சக்தியின் சின்னமாகவும் கருதப்படுகிறது.இது செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. 




நண்டு வீட்டு வாசலில் வந்து நிற்கும்போது அவற்றை பிடித்து வீட்டில் சாமி அறையில் நண்டினை வைத்து மஞ்சள் குங்குமம் பூ வைத்து சூடம் காட்டி கொஞ்ச நேரம் கழித்து அவற்றை வெளியே விடுவது மரபாகவும் உள்ளது. 


சிறு குழந்தைகள் நண்டினை கையில் பிடித்து விளையாடுவதும் உண்டு. இப்படி சிறப்பு வாய்ந்த நண்டினை பற்றி தெரிந்து கொள்வோம்.


நண்டு (Crab) என்பது கடல், நன்னீர், உவர்நீர் எனப் பல நீர்நிலைகளில் வாழும், கடினமான ஓடுடைய, பக்கவாட்டில் நகரும் ஒரு விலங்காகும். இவை இரண்டு பெரிய கிடுக்கிப் பிடிகளைக் (pincers) கொண்டவை. பல இனங்கள் உணவாகவும் பயன்படுகின்றன.


ஜப்பானிய சிலந்தி நண்டு மிகப்பெரிய வகையாகும். தேங்காய் நண்டு நிலத்தில் வாழும் பெரிய நண்டு இனமாகும். மணல் நிறைந்த கடற்கரையோ, சேறும் சகதியுமான ஏரியோ அல்லது பாறைகள் நிறைந்த கடல் பாறையோ வழியாக அவர்கள் பக்கவாட்டாகச் செல்வதை பார்க்க முடியும்.


நண்டு வளைகள் நண்டுகளுக்குப் பாதுகாப்பான இருப்பிடமாகவும், இரவில் உறங்கவும், எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும், இனப்பெருக்கத்திற்கும் உதவுகின்றன; மேலும், அவை மண்ணின் அமைப்பை மேம்படுத்துகின்றன, சில சமயம் விவசாயிகளுக்கு உதவியாகின்றன, மேலும் அவற்றின் ஓடுகள் உணவுத் தொழிலின் கழிவாகவும், பல பயனுள்ள பொருட்களாகவும் பயன்படுகின்றன. 


நண்டு வளைகளின் முக்கியப் பயன்கள்:


பாதுகாப்பு மற்றும் இருப்பிடம்: நண்டுகள் தங்கள் வளைகளைப் பயன்படுத்தி, வேட்டையாடும் விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்கின்றன. மணல் அல்லது சேற்றில் உள்ள வளைகள் அவற்றின் வீடுகளாகவும், ஓய்வெடுக்கும் இடங்களாகவும் செயல்படுகின்றன.


இனப்பெருக்கம் மற்றும் குஞ்சுகளின் பாதுகாப்பு: பெண் நண்டுகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க வளைகளைப் பயன்படுத்துகின்றன. குஞ்சுகள் வளரும் வரை வளைகளே அவற்றின் பாதுகாப்பு அரணாக இருக்கின்றன.


உணவு தேடுதல்: சில நண்டுகள் வளைகளில் இருந்து வெளியே வந்து இரையைத் தேடுகின்றன. அவற்றின் வலிமையான நகங்களால் உணவை (மீன், புழுக்கள்) பிடித்து உண்ணுகின்றன.


நண்டுகள் வளைகளைத் தோண்டும்போது, மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிக்கின்றன. இது மண் வளத்தையும், நீர்ப்பாசனத்தையும் மேம்படுத்த உதவுகிறது.


இனிமேல் வீட்டுப் பக்கம் நண்டு வந்தால் விடாதீங்க.. அன்போடு வரவேற்பு சொல்லுங்க!


(மயிலாடுதுறை த.சுகந்தி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)