- ஆ.வ. உமாதேவி.
கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட ஒருவன், மருத்துவமனைக்கு சென்றான். அவனை பரிசோதித்த மருத்துவர், காலையில் இரண்டு இட்லி, மத்தியானம் சிறிதளவு மோர் சாதம், இரவில் இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு இந்த மாத்திரைகளை சாப்பிடுங்க என்றார். நீங்க சொன்னதெல்லாம் வழக்கமான ஆகாரத்துக்கு முன்னாலேயா? பின்னாலேயா? டாக்டர், என்றான்.
அவன், அளவுக்கு அதிகமாக சாப்பிடும் குணம் கொண்டவன் என்பதை அறிந்த மருத்துவர், ஐயா! அளவாய் சாப்பிட வேண்டும் என்று சொல்ல, அவன், டாக்டர்! சின்ன வயசுல எங்க அம்மா நொறுங்க தின்னவனுக்கு நூறு ஆயுசுடா, நல்லா சாப்பிடுன்னு சொன்னாங்க. சின்ன வயசிலே சொன்னதை மனதிலே வச்சிக்கிட்டு, நான் வயிற்றுக்கு மட்டும் வஞ்சகம் செய்யாமல், நல்லா சாப்பிடறேன் டாக்டர் என்று சொன்னான்.
நொறுங்கத்தின்பது என்பதற்கு அளவுக்கு அதிகமாக, முடிந்தவரை என்றெல்லாம் தவறான பொருள் கொண்டு, பழமொழியின் உண்மை பொருளை அறியாமல் புரிந்து கொண்ட அவனது அறியாமையை நினைத்து, புன்னகை செய்தார் டாக்டர். ஐயா! நாம் உண்ணும் உணவு வாயில் போட்ட உடனே, அப்படியே செரித்து விடுவதில்லை. வாயில் போட்டவுடன், அங்கு சுரக்கும், உமிழ்நீருடன் சேர்ந்து இரைப்பைக்குச் சென்று, செரிமான உறுப்புகளால் செரிக்கப்பட்டு, வேண்டாத சக்கைகளை வெளியேற்றிவிட்டு, மிகச்சிறிய அளவு உணவையே ரத்தமாக மாற்றி, இதயத்திற்கு அனுப்புகிறது.
இவ்வாறு நாம் உண்ணும் உணவு தூய ரத்தமாக மாறி உடலுக்கு வலுவும், பொலிவும் தர, நம் உடலில் பல உறுப்புகள் இடைவிடாது இயங்க வேண்டி உள்ளது. ஆனால், நாம் உண்ணும் உணவை நன்றாக மென்று, கூழ் போல கரையும் அளவுக்கு, அதாவது நொறுங்கிப் போகும் அளவுக்கு மென்று உண்டால், செரிமான உறுப்புகளின் வேலைப்பளு குறையும். செரிமான உறுப்புகளின் வேலைப்பளு குறையக்குறைய அவை, நீண்ட காலத்துக்கு பழுதுபடாமல் இயங்கி வரும். அதனால் நம் ஆயுளும் நீளும். இதுதான் "நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு" என்னும் பழமொழியின் உண்மையான பொருள்.
நம் முன்னோர்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து, அதை பழமொழிகளாக நமக்குத் தந்துள்ளனர். அவர்கள் தவறான களைகளை, அறிவு பயிர்களிடையே நிச்சயமாக விதைத்திருக்க மாட்டார்கள். தவறான பொருளை தரக்கூடிய மொழியை நம் முன்னோர்கள் நிச்சயமாக சொல்லி இருக்க மாட்டார்கள். உணவு செரிக்கும் பணியை செய்யும் அத்தனை உறுப்புகளும், ஓய்வு பெற எண்ணியே நம் முன்னோர்கள் கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களை தேர்ந்தெடுத்து, விரதம் கடைபிடிப்பதை வழக்கப்படுத்தினர் என்பதையும் எண்ணிப் பார்த்து, உண்மையை உணர்வோம்.. உடலை பேணி காப்போம்!
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி் பணியாற்றுகிறார்)
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?
விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?
நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!
ஓம்கார ஹரியே .. ஒம் ஒம்ஹரியே கோவிந்தஹரியே .. கோவர்த்தனம் சுமந்த ஹரி நீ!
பேரின்பப் பெருவாழ்வு பெற்று உய்க... தேவாரத் தலங்களின் விளக்கமும், செல்லும் வழிகளும்!
நவதானிய லட்டு.. கர்ப்பிணிப் பெண்களுக்கு சூப்பரான உணவு.. ரத்தம் ஊறுமாம்!
சுண்டலான்னு.. கிண்டலா கேட்காதீங்க பாஸ் .. புரதங்களின் அரசன்.. குழந்தைகளின் சிறந்த snacks!
{{comments.comment}}