- சகோ. வினோத்குமார்
ராஜபாளையம்: அதிகாலையில் எழுந்து விட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் 90 சதவீத மக்களால் இதனை சாத்தியப்படுத்த முடிவதில்லை. வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் அதிகாலையில் எழுவதை சாதாரண பழக்கவழக்கமாக மாற்ற இயலும்.
ஒரு சில திரைப்படக் காட்சிகளில் அதிகாலையில் எழுவதை நள்ளிரவுடன் ஒப்பிட்டு நகைச்சுவை கலந்து காட்சிகள் வருவதை பார்த்திருப்போம். ஆனால் வாழ்விலும் இதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு கடந்து போவது ஆபத்தானது. நாம் தற்போது காலத்தில் எழுந்து பார்த்துக் கொண்டிருக்கும் வெற்றியாளர்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட நபர்கள் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இந்த விஷயத்தை நாமும் அறிந்திருந்தாலும் காலை இருந்திருப்பது மிக சவாலான விஷயமாகவே உள்ளது.
காலையில் சீக்கிரம் எழுவதை தள்ளிப் போடுவதிலிருந்து உங்கள் தோல்வி ஆரம்பமாகிறது என்று ஒரு காணொளியில் மகாத்ரேயா குறிப்பிட்டுள்ளார். நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே அந்த நாளை பாதி வென்றுவிட்டோம் என அர்த்தமாகும். இவ்வாறு சரியான நேரத்தில் எழும் போது நமக்குள்ளே புத்துணர்ச்சி பிறக்கும். நாம் திட்டமிட்ட செயல்களை சரியான நேரத்தில் செய்வதற்கான ஆக்கப்பூர்வமான நேரம் கிடைக்கிறது. நாம் நினைத்த நேரத்தை விட்டு தாமதமாக எழும்போது சிறிய அளவில் பதற்றம் ஏற்படுகிறது. இந்தப் பதற்றம் நாள் முழுவதும் தொடர வாய்ப்பு இருப்பதால் அன்றைய தினத்தின் செயல் திறன் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

முந்தைய தினத்தின் இரவில் செயல்பாடுகள் எப்படி உள்ளது அதை பொறுத்தே அதிகாலையில் சீக்கிரம் விழிக்க முடியும். முக்கியமாக இரவு நேரத்தில் குறைந்தது ஆறு மணியிலிருந்து அதிகபட்சம் எட்டு மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். சாப்பிட்டு இரண்டு மணி நேரம் பிறகு தூங்க செல்வது நல்லது. விரைவில் செரிமானம் ஆகக் கூடிய எளிய உணவுகளை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செல்போன் டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நல்ல புத்தகம் படித்துவிட்டு தூங்க செல்வது மனநிலையை ஒருமைப்படுத்த உதவும். இந்த செயல்களை செய்து விட்டு பின்னால் தூங்குவது நம்மை ஆழ்ந்த உறக்கத்திற்கு இட்டுச்செல்லும்.
ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் அதிகாலையில் எழுந்திருப்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையின் வெற்றி சதவீதத்தை அதிகரிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் எழுந்திருப்பது மட்டுமே இலக்காகவாக கொண்டிருக்காமல் உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் இவற்றை தொடர்ந்து செய்து வர வேண்டும். இது உடல் ரீதியான செயல் திறனை அதிகரிக்கிறது. அதுமட்டுமில்லாமல் மனதில் ஏற்படும் தேவையில்லாத சிந்தனைகளை களைகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் சந்திக்கும் சவால்களை துணிவுடன் சந்தித்து அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வழிகாட்டும்.
(சகோ.வினோத்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?
{{comments.comment}}