- க.யாஸ்மின் சிராஜூதீன்
சென்னை: வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் திட்டமிட முடியாது.. அதுதான் நமக்கான திட்டங்களை வைத்திருக்கும். அந்தத் திட்டங்கள் செயலாகும்போது அதை சிறப்பானதாக வடிவமைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.
இந்த வாரத்தை தொடங்கும் உங்களுக்கு அது சிறப்பானதாக மாற வாழ்த்துகள்.. வாங்க சில சிந்தனைத் துளிகளை மனதில் ஏந்தி இந்த வாரத்துக்குள் நுழைவோம்.
சிந்தனைத்துளிகள்

வைராக்கியம் வாழவைக்கும்..
பொறாமை புரளி பேசவைக்கும் ..
கோபம் உண்மையை உரைக்கும்
மனக்கட்டுப்பாடும், விடாமுயற்சியும், நேர்மறை எண்ணமும் நம்மை சிறந்த எடுத்துக்காட்டு ஆக்கும்.
--
பருவகாலங்களைப் போல மனித வளர்ச்சி பருவங்களையும் ரசித்து வாழ்வோம். இளமை, முதுமை என வேறுபாடு பார்க்காதே. மனம் என்றும் இளமைதான் உன் எண்ணங்கள் அழகானால்.
--
பொருள்,வண்ணம்,வடிவம்,இயற்கை,செயற்கை எதுவாக இருந்தாலும் குழந்தைப்பருவம் ரசிக்கும் அனைத்தையும் உயிருள்ளவையாக பாவிக்கும் விளையாடி மகிழும் ... வளர்ந்த பின்னே உயிருள்ள மனிதனின் உணர்வுகள் கூட புரிந்துகொள்ள முயற்சிக்காமல் இயந்திரத்தனமாக வாழ்வதேனோ எங்கே தொலைந்து போனது இயல்புகுணம். மனிதநேயம் கொள்வோம்,அன்புசெலுத்துவோம் . பணம் என்பது அத்தியாவசியத் தேவை.குணம் என்பது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கத் தேவை.
--
எதிர்மறையான விமர்சனங்கள் வெறும் தடைக்கற்களே , நம்மை வீழ்த்தும் கற்கள் அல்ல , இவை நம்மை ஆளாமல் இருக்கவேண்டுமானால்... தவறு நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும்... இன்றேல் தடையென தூக்கி எறிந்து
வீரநடைபோட வேண்டும்.
(கவிஞர் ஜி.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}