அம்மாவின் அன்பு!

Nov 10, 2025,02:39 PM IST

- க. யாஸ்மின்சிராஜூதீன்


சொல்லால்  கூற முடியுமோ 

அம்மாவின் அன்பை அகிலமே... !!!


கண்ணுக்கு தெரியும் தெய்வம்தான்

உன்னால் மறுக்க முடியுமோ...!!!


உலகம் நீயும் காணவே 

மறுபிறவி எடுத்திடுவாள்...!!!


எதிர்பார்ப்பில்லா  அன்புதான் 

என்றும் நிலைத்து வாழும்தான்...!!!


அழுகை குரலை கேட்டாலே  

மற்றதெல்லாம் மறதிதான்...!!!


உந்தன் பசியை போக்கவே 

தாய்பால் தந்து மகிழுவாள் ...!!!




சீராட்டி வளர்க்கவே 

சிரமம் பல அடைந்திடுவாள்...!!!


சிட்டாய் நீயும் வளரவே 

பட்டு மெத்தை தைத்திடுவாள்...!!!


இதமாய் நீயும் கண்ணுறங்க 

தாலாட்டு பாடி தொட்டிலை ஆட்டிடுவாள்...!!!


சொகுசாய் நீயும் வளர்ந்திடவே 

அவளின் மடியே உலகம் ஆக்கிடுவாள்....!!!


உந்தன் ஒவ்வொரு  அசைவையும் 

பாராட்டி ஊக்கம்  அளித்திடுவாள்..!!!


நீயும்  நன்றாய் படிக்கவே 

கடவுளை தினமும் தொழுதிடுவாள்..!!!


படித்து பட்டம் பெற்றாலே 

கிரீடம் சூட்டி மகிழ்ந்திடுவாள்...!!!


சிறந்த பணியில் அமர்ந்திட்டால் 

துள்ளி குதித்து மகிழ்ந்திடுவாள்...!!!


திருமண விழாவை உனக்குதான் 

ஊர்மெச்ச செய்திடுவாள்...!!!


வாரிசுகளை எல்லாம் வளர்த்துதான் 

அன்பு மழையை பொழிந்திடுவாள்...!!!


சேவகியாக மாறித்தான் 

சேவையெல்லாம் செய்திடுவாள்...!!!


இறக்கும் வரை உன் நினைவே

உதிரமாக ஓடிடுமே...!!!


எல்லா இழப்பையும் மீட்டிடுவாள் 

அம்மா உடன் இருந்தாலே...!!!


அம்மாவை நீயும் இழந்தாலே 

எதுவுமில்லை உலகிலே ...!!!


அம்மாவின் அன்பு  சிகரம்தான் 

என்றும் அணையா விளக்குதான்...!!!


அம்மாவின் அன்பு தொடரும்தான் 

சொல்லி முடிக்க முடியாதே...!!!


கண்ணுக்கு தெரியும் தெய்வம்தான் 

கண்ணென, காத்திடவேண்டும்தான்.....!!!


அம்மாவின்  அன்பு............

உலகம் உள்ள வரை.......!!!!

சொல்லில் அடக்கமுடியுமோ....

சொல்லித் தீருமோ..வையகமே..!!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை... அண்ணாமலை விமர்சனம்!

news

தமிழகத்தில் மழை தொடரும்... நாளை 3 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை மையம் தகவல்!

news

அம்மாவின் அன்பு!

news

கடன் -தலைக்குனிவு

news

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை.. அரசாங்கம் இருக்கிறதா?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

news

சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை: அன்புமணி ராமதாஸ்!

news

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.880 உயர்வு!

news

ரஜினி, சூர்யா, தனுஷ் படங்களுக்கு புது செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. ஒத்து வருமா?

news

துள்ளுவதோ இளமை புகழ் நடிகர் அபிநய் காலமானார்.. கல்லீரல் நோயால் மறைந்த சோகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்