- க.யாஸ்மின் சிராஜூதீன்
வீதியும் கடலாகும்
மழை நீரும் தேங்கினாலே...
நீருக்கு வழிகாட்ட மறந்தது யாரோ....
பொறுப்பை தட்டிக் கழிக்கும் பொறுப்பாளிகளோ....
இது யார் செய்த பிழையோ
மழை நீருக்கு இழைத்த அநீதியோ....
பாதுகாக்கப்பட வேண்டிய அமிர்தம்.....
வீணாகி சேராவதேனோ....

வாகனங்கள் நீச்சலடித்து கடக்க வேண்டிய சூழல்தானே....
வீட்டுச் சுவர்களிலே வண்ணக் கோலமிட்டுச் செல்லும் தூரிகையானதே.......
வீதியில் கடலாட
வாகனங்கள் அதன்மீதாட...
அலைகள் வாசலை
தொட்டு விளையாட....
சுவர்கள் வண்ணமயமாக
உரிமையாளர் கண்டு மனம் நோக.....
என்று தீரும் இந்த நிலையோ
வாக்களிக்கும் போது நாம் செய்த தவறோ.....
சேவை மனம் கொண்ட
உறுப்பினரை தேர்ந்தெடுப்பீரே...
ஊரும் நாடும் சிறக்கச்செய்வீரே... !
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
திண்ணை வைத்த வீடு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
வீதியும் கடலாகும்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 08, 2025... இன்று மாற்றங்கள் தேடி வரப் போகும் ராசிகள்
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}