அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

Mar 09, 2026,05:52 PM IST

- எம். ராதிகா


மார்ச் 9 - அமெரிக்கர்கள் National Meatballs Day (தேசிய இறைச்சி பந்து தினம் ) என்று கொண்டாடுகிறார்கள். 


அமெரிக்கர்களுக்கு எதற்கு தான் கொண்டாடுவது எதை தான் கொண்டாடுவது என்று விவஸ்தையே கிடையாது. Meat ball என்று ஒரு நாளைக் கொண்டாடுகிறார்கள். அது என்னமோ தெரியாத டிஷ் என்று நினைத்து விடாதீர்கள். நம்ம ஊரு கோலா உருண்டை தான். அதற்கு ஒரு தினம். 


அமெரிக்கர்கள் அதை எல்லா தலைமுறைகளையும் இணைக்கும் ஒரு உணவாக கருதுகிறார்கள். குடும்பத்தினர்கள் ஒரு get-together போட்டால் அதில்  Meat ball க்கு அதில் ஒரு பங்கு உண்டாம். அந்த அளவு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும், இத்தாலிய - அமெரிக்க கூட்டுறவு தயாரிப்பாக மதிக்கிறார்கள். எந்த தினம் என்றாலும் உடனே அதற்கு offer மழை வழங்குவது தானே அமெரிக்கர்களுக்கு பழக்கம். உணவு விடுதிகளில் இதற்கு இன்று பல தள்ளுபடிகள். வீடுகளில் இன்று விதம் விதமாக meat ball gravy ( நம்ம ஊரு கோலா உருண்டை, பருப்பு உருண்டை குழம்பு மாதிரி) , இத்தாலியன் sphagetti என்று சமைப்பார்களாம். 




அன்னையர் தினம், காதலர் தினம், தந்தையர் தினம், இதற்கு எல்லாம் ஆதி மூலம் ரிஷி மூலம் பார்த்தீர்கள் என்றால் அமெரிக்காவில் போய் தான் முடியும். அவர்கள் தாய் தந்தையரை வருடத்துக்கு ஒரு முறை தான் நினைத்து பார்ப்பார்கள். அதனால் அப்படி கொண்டாடுகிறார்கள். ஆனால் நமது நாட்டிலும் ஆரம்பித்து விட்டோமே. (78 வயதான என் அம்மாவே 'நீ எனக்கு விஷ் பண்ணல' என்று கோபித்து கொள்கிறார்களே ). 


பார்த்து கொண்டே இருங்கள். நம்ம ஊரிலும் Meatballs Day வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அப்பொழுது ஒரே ஒரு kola உருண்டைக்கு சொத்தை எழுதிக் கேட்கும் நம்ம ஒரு மெஸ்களிலும் offer வரும். நாமும் வாங்கி சாப்பிட்டு ஜாலியாக ஒரு செல்பி எடுத்து இன்ஸ்டாவில் போடத்தான் போகிறோம்.


என்னவோ போடா மாதவா!


(மு. ராதிகா, சிவகாசி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரைணக்கு ஏற்பு

news

அமைதியின் சிகரம் யோகினி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

news

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் எதிரொலி.. இந்திய பங்குச்சந்தைகள் அதிரடி உயர்வு!

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்